பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. தேசியக் கவிப் பற்றி iԱՅ “பணம், பொதுக்கல்வி, விடுதலை மூன்றும் இல்லாவிட்டால் அந்த நாட்டில் மானமேது?” என்று பாரதி மிகவும் தெளிவாகவே குறிப்பிடுகிறார். “நமது பூர்வீகர், சயன்ஸ் தேர்ச்சியிலே நிகரில்லாது விளங்கினார்கள். அந்தக் காலத்து லெளகீக சாஸ்திரம், நமக்குத் தெரிந்த மாதிரி வேறு யாருக்கும் தெரியாது. இந்தக் காலத்து சங்கதி தான் நமக்குக் கொஞ்சம் இழுப்பு” என்று குறிப்பிடுகிறார். "எவனும் உடம்பை உழைப்பினாலும் அசைவினாலும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். மனதை உற்சாக நிலையில் வைத்துக் கொண்டால் உடம்பிலே தீவிரம் உண்டாகும். உடம்பை தீவிரமாகச் செய்து கொண்டால் மனது உத்சாகத்துடன் இருக்கும். மனத்தளர்ச்சிக்கு இடம் கொடுக்கலாகாது. கவலை மனிதனை அரித்துக் கொன்று விடும். பயத்தை உள்ளே வளர்ப்பவன் பாம்பை வளர்க்கிறான். “எனவே மன உறுதி, சந்தோஷம் உலகை நடத்தும் சக்தி, நமக்கு நன்மை செய்யும் என்ற நம்பிக்கை, சரீர உழைப்பு, முதலிய நற் குணங்களைக் கைக்கொண்டு ஊக்கத்தை வழக்கப் படுத்திக் கொள்ள வேண்டும். "உடம்பிலே நோயில்லாமல் வலிமையுடன் இங்கே நூறாண்டு வாழலாம்” என்று ஒரு சிறந்த கருத்தை உறுதியாகவும் மகிழ்ச்சியுடனும் தனது உரைநடைப் பகுதியில் பாரதி கூறுகிறார். ஆங்கிலக் கல்வியில் உள்ள கேடுகள், தீமைகள், சுதேசியக் கல்வி அல்லது தேசியக் கல்வியின் அவசியம் ஆகியவற்றில் பாரதி தனது கவிதைகளிலும் உரைநடைக் கட்டுரைகளிலும் தனது கருத்துகளை மிகவும் தெளிவாகவும் உறுதியாகவும் எடுத்துக் கூறுகிறார்.