பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19-பாதி-தன்னுடைய கவிதைகளுக்கு எழுதியுள்ள சில முன்னுரைகள் 114 நிறைவேற்றப் படுகிறது. பாரதியார் தனது பாஞ்சாலி சபதம் என்னும் காவியத்தில் பல புதிய அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்களை முன் வைத்துள்ளார். நமது நாட்டில் தோன்றியுள்ள நூல்கள் பலவற்றிற்கும் உரை நூல்கள் எழுதப்படுவதும் விளக்க நூல்கள் வருவதும் நமது இலக்கிய மரபும் வரலாறுமாகும். பாரதி தனது பாஞ்சாலி சபதம் காவியத்தில் வரும் சில வரிகளுக்கு விளக்கமும் விரிவுரையும் அவரே எழுதியுள்ளார். அவையும் பாரதியாரின் சிறந்த உரைநடையாகவும் அமைந்துள்ளது. பாரதியின் பாஞ்சாலி சபதம் காவியத்தில், “சிந்தையில் அறமுண்டாம், - எனிற், சேர்ந்திடுங் கலி செயுமறமுமுண்டாம்” என்னும் பாடல் வரிகள் வருகின்றன. அதற்கான விளக்கமாக பாரதி ஒரு முக்கியமான கருத்தை முன் வைக்கிறார். ஒரு முக்கியமான வரலாற்று விவரத்தையும் முன் வைக்கிறார். மக்களுடைய சிந்தனையில் அறநெறிகள் வெளிப் -படுகின்றன. அதே சமயத்தில் கலியும் சேர்ந்திருப்பதால் மறமும் வெளிப் படுகிறது. அறத்திற்கு மாறான கொடும் செயல்களும் சேர்ந்து வெளிப்படுகின்றன. இது பற்றிய விளக்கமாக பாரதி “ஒரு சங்கத்தின் ஒரு ஜாதியின் - ஒரு தேசத்தின் - அறிவு மழுங்காதிருக்கும் வரை அதற்கு நாச மேற்படாது. பாரத தேசத்தில் முற்காலத்திலே பாரத ஜாதி முழுமையின் அறிவுக்குப் பொருப்பாளியாகப் பிராமணர் என்னும் பெயருடைய ஒரு வகுப்பினர் இருந்ததாகப் பழைய நூல்களிலே காணப்படுகிறது. அந்தப் பிராமணர் தமது கடமைகளைத் தவறாது நடத்தியிருப்பார்களானால் மற்ற குலத்தவரும் நெறி தவறியிருக்க மாட்டார்கள். மகா பாரதப் போர் நடந்திராது பாரத தேசத்தில் பெரியதொரு கூடித்திரிய நாசமும்