பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

golgou no sumidouji, umÉ\lor_o_ombol__-_2}_**flores# 117 இங்கு சூரியாஸ்தமன வர்ணனை கூறப்படுகிறது. இப்பாடல்களின் கருத்து நன்கு விளங்கும் பொருட்டு நமது “கர்மயோகி’ப் பத்திரிகையிலே இவ்விஷயத்தைப் பற்றி எழுதியுள்ள வியாசமொன்றை இங்கு தருகிறோம் ஸ9ர்யாஸ்தமனம் உலகத்தில் எங்கு பார்த்தாலும் நிறைந்து கிடக்கும் லாவண்யங்களைத் தமிழர்கள் கவனிப்பது கிடையாது. சனிக்கிழமை சாயங்காலந்தோறும் குளக்கரைகளில் போய் கருடன் பார்ப்பதற்கென்றால் நம்மவர்கள் கூட்டம் கூட்டமாக ஓடுகிறார்கள். ஸஅர்யாஸ்தமன காலத்தில் வானத்திலே தோன்றும் அதிசயங்களைப் பார்க்க ஒருவர் கூட போவதில்லை. அப்போது வானத்திலே இந்திர ஜாலம் மகேந்திர ஜாலங்களெல்லாம் நடக்கின்றன. இந்த கூடிணம் இருந்த தோற்றம் அடுத்த கூடிண -மிருக்காது. உலகத்திலுள்ள திரவிய முழுவதையும் செலவிட்டு வர்ணக் காட்சிகள் ஏற்படுத்திப் பார்ப்போமானாலும் அது ஸ9ர்யாஸ்தமன காலத்தில் வானத்திலே நாம் பொருட் செலவில்லாமல் பார்க்கக் கூடிய காட்சிகளிலே கோடியில் ஒரு பங்கு கூட காணாது. வான வேடிக்கைகள் பார்க்க ஒரு செல்வன் பதினாயிரக்கணக்கான திரவியம் செலவிடுகிறான். அவனது செல்வத்தினாலன்றோ இந்தக் காட்சி சுலபமாகிறதென்று அதைப் பார்த்து ஆயிரம் ஏழைகள் பெரு மூச்செறிகிறார்கள். ஸ்ஹோதரா, ஸ9ர்யாஸ் -தமனத்தின் வினோதங்களைச் சென்று பார். ஸஅரியனைப் பார்த்தால் கண்ணுக்குத் கெடுதியென்று குருடர் நம்பிக்கையைப் பொருட்டாக்காதே. ஸஅரியனைப் பார்ப்பது பாவம் என்று மூடர் காஸ்திரத்தைக் கண் கொண்டு பார்க்காதே.