பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20-பாதியின்_பகவத்_கிதை_தமிழாக்கம் 124 பெருகும். பராசக்தி உனக்குத் துணையாக இருக்கிறாள். தமிழா! பயப்படாதே! வீரமும், புகழும் விடும் உனக்கு வந்து சேரும் பயப்படாதே! மனித முயற்சிகள் அனைத்திலும் ஈடுபட்டு நீ முன்னேறு வாயாக! என்றெல்லாம் தமிழனுக்கு உணர்வும் ஊக்கமும் ஊட்டிய மகாகவிஞன் பாரதியல்லவா? பாரதி தனது தமிழ் உரைநடையில் கதை, கட்டுரைகள், பத்திரிகைச் செய்திகள் எழுதினான். அவைகளில் பல புதிய கருத்துகளை முன் வைத்தான். பாரதி எந்தப் பொருளைத் தொட்டாலும் அதில் புதுமையைப் புகுத்தினான். பாரதி தனது கவிதைகளைப் போலவே உரைநடையிலும் பல புதிய கருத்துக்களையும் எடுத்துக் கூறியுள்ளார். பாரதி பெருங்கவிஞன் என்று பெயரும், புகழும், பாராட்டுகளும் பெற்றுள்ளான். புரட்சிகர, ஜனநாயக் பெரும் புலவனாக நாட்டிலும், நாட்டு மக்களிடமும் பெயரும் புகழும் பெற்றிருக்கிறார். தமிழகத்தில் மட்டுமல்லாமல் மும்பாய், டில்லி, கொல்கத்தா, பெங்களுர், ஜதராபாத் முதலிய இந்தியப் பெரு நகரங்கள் பலவற்றிலும் பாரதிக்கு சங்கங்கள் அமைந்து பாரதியின் புகழும் தமிழின் புகழும் பரவிக் கொண்டிருக்கிறது. அவருடைய கவிதைகள் பிரபலமடைந்து கொண்டிருக்கின்றன. ஆயினும் அவருடைய கவிதைகள் பிரபலமடைந்துள்ள அளவிற்கு அவருடைய கட்டுரைகளும், கதைகளும் பிரபலமாகப் பரவியுள்ளன என்று கூற முடியவில்லை. இன்னும் அவருடைய கட்டுரைகளும், கதைகளும் கூறப்படும் அளவுக்குக் கூட அவருடைய பகவத் கீதை தமிழாக்கமும், அந்தத் தமிழாக்க நூலுக்கு அவர் எழுதியுள்ள முன்னுரையும் பிரபலமாகி உள்ளது