பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

gadipCunnis suaritëáuski unustúlë a-angkan— - 2. ***fanost 127 நிகழ்வது யாதாயினும் அது கடவுள் மயமானது” என்று பொருள்படும் என்று குறிப்பிடுகிறார். முன்னுரையின் 3-ம் பகுதியில் “எல்லாச் செயல்களையும், கடவுளுக்கென்று சமர்ப்பித்து விட்டுப் பற்றுதல் நீங்கி எவன் தொழில் செய்கிறானோ அவனைப் பாவம் தீண்டுவதில்லை. தாமரை இலை மீது நீர் போல (கீதை 5-ம் அத்தியாயம் 10-ம் சுலோகம்) சால நல்ல செய்தியன்றோ! மானுடர்கள் இஃது உங்களுக்கு? பாவத்தைச் செய்யாமல் இருக்கும் வழி தெரியாமல் தவிக்கும் மானுடரே! உங்களுக்கு இந்த சுலோகத்தில் நல்வழி காட்டியிருக்கிறார் கடவுள். ஈசனைக் கருதி, அவன் செயலென்றும், அவன் பொருட்டாகச் செய்யப் படுவதென்றும் நன்கு தெளிவெய்தி நீங்கள் எத்தொழிலைச் செய்யப் புகுந்தாலும் அதில் பாவம் ஒட்டாது. தாமரை இலைமீது நீர் தங்காமல் நழுவி ஓடி விடுவது போல உங்கள் மதியைப் பாவம் கவர்ந்து நிற்கும் வலியற்றதாய் உங்களை விட்டு நழுவியோடிப் போய் விடும் என்று குறிப்பிடுகிறார். முன்னுரை 4-ம் பகுதியில் “எனவே கண்ணபிரான் மனிதருக்குள் ஜாதி வேற்றுமையும் அறிவு வேற்றுமையும் பார்க்கக் கூடாதென்பதுமட்டுமேயன்றி எல்லா உயிர்களுக்குள்ளேயும் எவ்வித வேற்றுமையும் பாராதிருத்தலே ஞானிகளுக்கு லக்ஷணம் என்று சொல்லுகிறார். “எல்லாம் கடவுள் மயம் அன்றோ? எவ்வுயிரிலும் விஷ்ணு தானே நிரம்பியிருக்கிறார். சர்வமிதம் பிரஹமம் பாம்பும் நாராயணன், நரியும் நாராயணன், பார்ப்பானும் கடவுளின் ரூபம், பறையனும் கடவுளின் ரூபம். இப்படியிருக்க ஒரு ஜந்து மற்றொரு