பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. பாரதியின் பகவத் கீதை தமிழாக்கம் 130 முன்னுரை 7-ம் பகுதியில் "இறந்து போன ஜீவன் முக்தர்கள் யாவரும், ஜீவன் முக்தியை எய்திய பின் அந்த நிலையினின்றும் வழுவினவர் -களாகவே கருதப்படுதல் வேண்டும். நித்ய ஜீவர்களாய் மண்மேல் அமரரைப் போல் வாழ்வாரே நித்ய ஜீவன் முக்தராவர். அத்தகைய நிலையை இந்த உலகில் அடைதல் சாத்தியம் என்று மேற்கூறிய இரண்டு சுலோகங்களிலே கடவுள் போதிக்கிறார். அதற்கு உபாயமும் அவரே குறிப்பிட்டிருக்கிறார். குளிர் - வெம்மை, இன்பம் - துன்பம் எனும் இவற்றை விளைவிக்கும் இயற்கை அனுபவங்கள், தெய்வக் கிருபையால் சாசுவதமல்ல. அநித்யமானவை. தோன்றி மறையும் இயல்புடையன. ஆதலால் இவற்றைக் கண்ட விடத்தே நெஞ்ச மிளகுதலும் நெஞ்சடைத்து மடிதலும் சால மிக பேதமையாமன்றோ? ஆதலால் இவற்றைக் கருதி எவனும் மனத்துயரப் படுதல் வேண்டா. அங்ங்ணம் துயர்ப் படாதிருக்கக் கற்பான். சாகாமலிருக்கத் தகுவான். இஃது றுரீகிருஷ்ணனுடைய கொள்கை. இதுவே அவருடைய உபதேசத்தின் சாராம்சம். பகவத் கீதையின் நூற்பயன். எனவே பகவத் கீதை அமிர்த சாஸ்திரம்” என்று பெயர் என்று பாரதி மிகவும் சிறப்பாகக் குறிப்பிடுகிறார். முன்னுரை 8-ம் பகுதியில் “அமிர்த சாஸ்திரம்” அதாவது சாகாமலிருக்க வழி கற்றுக் கொடுக்கும் சாஸ்திரமாகிய பகவத் கீதையைச் சிலர் கொலை நூலாகப் பாவனை செய்கிறார்கள். துரியோதனாதிகளைக் கொல்லும் படி அர்ஜுனனைத் துண்டுவதற்காகவே இந்தப் பதினெட்டு அத்தியாயமும் கண்ணபிரானால் கூறப்பட்டனவாதலால் இது கொலைக்குத் துண்டுவதையே தனி நோக்கமாகவுடைய நூலென்று சிலர் பேசுகிறார்கள். கொலை செய்யச் சொல்ல