பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்மொழி-வளர்ச்சியில்-பாதியின்-உரைநடை-அ-சீனிவாசன் 133 முன்னுரை 10-ம் பகுதியில் மனம் இயற்கையாலும், தீய சகவாசத்தாலும் ஆத்மாவுக்குத் துன்பமிழைத்தல் பிரத்யகூடிம், நல்ல கூட்டத்தாலும் நல்ல பயிற்சியாலும் அதனை உபகார வஸ்துவாகச் செய்தல் சாத்யமென்பது யோகிகளின் சர்வ சாதாரண அனுபவம். எல்லாம் கடவுளுடைய செயல் என்பது பொது உண்மை. பரம சத்தியம். ஆயினும் மனிதருக்குத்துன்பமுண்டு. எல்லாம் கடவுளுடைய வடிவம் என்பது பரம சத்தியம். எனினும் ஜீவர்கள் துயரப்படுவதைப் பிரத்யகூடிமாகக் காண்கிறோம். சூரிய கோளங்கள் ஒன்றோடொன்று மோதித் தூளாகின்றன. இவையனைத்தும் புதியன புதியனவாகத் தோன்றுகின்றன. கோடிப்பொருள்கள் கோடியா? ஒரு கோடியா? கோடி, கோடியா? கோடி, கோடி, கோடி, கோடியா? அன்று அனந்தம், எண்ணத் தொலையாதன எண்ணத் தொலையாத பொருள்கள் கூடிணம் தோறும் தோன்றி மடிகின்றன. எல்லாம் கடவுளுக்கு ஒரேமாதிரி. சலித்தல் அவருடைய இயல்பு. அவருடைய சரீரமாகிய ஜகத் ஓயாமல் சுழன்று கொண்டிருத்தல் இயற்கை. இதனால் அவருக்கு அசைவில்லை. அவருக்கு அழிவில்லை” என்று பாரதியார் கூறுகிறார். முன்னுரை 12-ம் பகுதியில் “இயற்கை விதியை அனுசரித்து வாழ வேண்டும். அதனால் எவ்விதமான தீமையும் எய்த மாட்டாது. எனவே சாதாரண புத்தியே பரம மெய்ஞ்ஞானம். இதனை ஆங்கிலேயர் காமன் சென்ஸ் என்பர். சுத்தமான, மாசுபடாத, கலங்காத, அஞ்சாத, பிழை படாத -சாதாரண அறிவே பரம மெய்ஞ்ஞானமாகும்.