பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. பாரதியின் பகவத் கீதை தமிழாக்கம் ΤΕΒ முதலாவது காரணம் வேத பாஷை மிகவும் பழமைப்பட்டுப் போனபடியால் அதன் உண்மையான பொருளைக் கண்டு பிடித்தல் மிகவும் துர்லபமாய் விட்டது. நிருத்தம் என்ற வேத நிகண்டையும் பிராம்மணங்கள் என்று சொல்லப்படும் பகுதிகளிலே காணப்படும் வேத மந்திரங்களையும் கற்ற பின்னரே ஒருவாறு வேத மந்திரங்களின் பொருளையறிதல், சாத்தியமாயிற்று. வேதம் பிரம்மாண்ட நூல். அதில் இத்தகைய ஆராய்ச்சி செய்வார் மிகச் சிலரேயாவர். இப்போது வேதத்திற்கு விளக்குப் போல நிற்கும் சாயனரென்ற வித்தியாரண்ய சங்கராசாரியாரின் பாஷ்யம் பிராம்மணங்களையும், நிருத்தத்தையுமே ஆதாரமாகவுடையது. பிராம்மணங்களில் பெரும்பாலும் கற்பனைக் கதைகளும், கற்பிதப் பொருள்களுமே கூறப்பட்டிருக்கின்றன. நிருத்தத்திலோ என்றால் பெரும்பாலும் வேதபதங்களுக்குச் சரியான பொருளே கூறப்பட்டிருக்கிறது. ஆனால் பல இடங்களில் அதன் தாது நிச்சயங்கள் மிகவும் சம்சயத்துக்கு இடமாகவும் சில இடங்களில் அதன் பொருட் கோளே பிழைபட்டதாகவும் இருக்கிறது” என்பது பாரதியின் வாக்காகும். பகவத் கீதை முன்னுரையின் நிறைவாக பாரதி, “உலகமெல்லாம் கடவுள் மயம் என்ற உண்மையான வேதாந்தத்தைக் கீதை ஆதாரமாக உடையது. மாயை பொய்யில்லை. பொய் தோன்றாது. பின் மாறுகிறதேயெனில் மாறுதல் மாயையின் இயற்கை. மாயை பொய்யில்லை. அது கடவுளின் திருமேனி. இங்கு தீமைகள் வென்றொழித்தற்குரியன. நன்மைகள் செய்வதற்கும், எய்துவதற்கும் உரியன. சரணாகதியில் - கடவுளிடம் தீராத மாறாத பக்தியால் - யோகத்தை எய்துவீர்கள். எல்லா ஜீவர்களையும் சமமாகக் கருதக்கட வீர்கள் அதனால் விடுதலை யடைவீர்கள், சத்திய விரதத்தால் ஆனந்தத்தை அடைவீர்கள்.