பக்கம்:தமிழ்-ஸமஸ்க்ருத அகராதி நே. ஈ. வெங்கடேச சர்மா.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

C முகவுரை. {ஸம்ஸ்க்ருதம் கற்கும் வித்யார்த்திகளுக்குத் தமிழ் பாஷையிலிருந்து மொழிபெயர்க்க ஸாதகமாயிருக்கும் வண்ணம் இந்நூல் தயாரிக்கப்பட்டது. இதில் தமிழ்ப் பதங்களை அகாராதிக் கிரமத்தில் பகுத்து அவைகள் ஒவ் வொன்றிற்கும் கேவலம் ஒரு ஸம்ஸ்க்ருத பதம் மட்டும் அர்த்தங் கொடுக்காமல் ஒரே அர்த்தமுள்ள பல சொற் களைக் காட்டி யிருக்கின்றன. அதற்காகவேதான் பக்கங் களின் நடுவில் கோடுகளிட்டுப் பிரிக்கவில்லை. இப்படிப் பல பதங்கள் கொடுத்திருப்பது, ஸம்ஸ்க்ருதத்தில் கத்ய, பத்யங்கள் கவனம் செய்பவர்களுக்கும், பேச விரும்புவர் களுக்கும் மிக உபயோக மாயிருக்கும். ஒரு பதம் ஞாபகத் திற்கு வராவிட்டாலும் இன்னொரு பெயர் வரலாம். நூல் பெரும்பான்மையாய் அமரம் என்னும் நாமலிங்கானு. சாஸனத்தையே ஆதாரமாக வுடையது. சிற்சில விடங் களில் இதுவும் போதாதெனக் கருதி இன்னும் இதர நிகண்டுகளையும் உதவிக்கு எடுத்திருக்கிறோம்.

(அமரத்தைப்போல் இதிலும் பதங்களுக்கு லிங்கங்கள் காட்டப்பட்டிருக்கின்றன. அ, உ, ரி, த, ந, ஹகாராந் யுடைய பதங்கள் பெரும்பான்மையாய்ப் புல்லிங்க மாகத் தானிருக்கும். அதே மாதிரி ஆ,இ,ஈ,ஊ, ஒள ச,ஜ द, ध, शஅந்தங்களையுடைய பதங்கள் ஸ்திரீலிங்க மென ஊஹிக்கத் தக்ததாகும். ம். என்னும் அனுஸ்வார பதங்களும் ஸகாராந்தபதங்களும் நபும்ஸங்கள். இப்பொது அடையாளத்திற்கு மாறுபட்டிருக்கும் பதங்களுக்கு அங் கங்கே தனித்து லிங்கங்கள் எழுதப்பட்டிருக்கின்றன.) சில பதங்கள் விஸர்க்க, அனுஸ்வார, அகாராந்தங்களை யுடைய தாயும் சில இகாராந்தங்களிலும் இதே மாதிரி இரண்டு லிங்கங்களிலும் வரும். அநேக விடங்களில் முன், பின் பதங்களைப் போன்றே நடுப்பதத்தின் லிங்கமு மிருக்கும்.