பக்கம்:தமிழ்-ஸமஸ்க்ருத அகராதி நே. ஈ. வெங்கடேச சர்மா.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ii

(ஒரு பதத்திற்கு அநேக அர்த்தங்கள் இருக்குங்கால் அதற்குப் பிரஸித்தார்த்தந்தான் கிராஹ்யமாகும். அநேக விடங்களில் அவ்வர்த்தமும் பக்கத்திலேயே எழுதப்பட்டி ருக்கும். மற்ற அர்த்தங்கள் வெவ்வேறிடங்களில் மிக எளி தான அர்த்தம் விளங்கும் பதங்களில் கூறப்பட்டிருக்கும். ஒரு பதத்திற்கு அர்த்தம் கொடுக்குங்கால் சில சொற்கள் எழுதப்பட்டிருக்கும். அப்பதத்திற்கு அதே அர்த்தமுள்ள வேறு இடங்களில் இன்னும் சில விசேஷ அர்த்த பதங்களு மிருக்கலாம்.) அதே அர்த்தத்தைச் சற்றேரக்குறைய தரும் பதங்களையும், சில விடங்களில் வியக்தமாகவே பார்க்கச் சொல்லியிருக்கும் பதங்களையும் பார்த்தால்தான் நாம் கருதியிருக்கும் பதமும், இன்னும் விசேஷமாக வேண்டிய அர்த்த பதங்களும் கிடைக்கும். ஒரு பதத்தின் அர்த்தத்தைப் பார்க்க வேண்டு மானால் அதே அர்த்தத்தைத் தரும் சுலபமான பதத்தை யும் பிறகு கஷ்டமான பதங்களையும், பிறகு பார்க்கச் சொல்லப்பட்டிருக்கும் பதத்தையும், பிறகு கொஞ்ச மேறக் குறைய அதே அர்த்தத்தைத் தரும் பதங்களையும் அனு பந்தத்தையும் பார்க்கவேண்டும். உதாரணமாக வெட்டல் என்னும் பதத்திற்கு பிளத்தல், அறுத்தல், செதுக்கல், பகுத்தல், துண்டித்தல் முதலிய அநேக பதங்களைப் பார்க்க வேண்டும். ஒரே தமிழ்ப் பதத்திற்கு அநேகம் அர்த்தங்கள் இருப்பதால் எல்லா தமிழ் அர்த்தங்களையும் கொடுத்து ஒவ்வோறிடத்திலும் சொன்னதையே திருப்பித் திருப்பிக் கூறப்பட்டில்லை. அதற்கு முக்கிய காரணம் புஸ்தகம் விரிவடைந்து விடுமென்பதே. சில பதங்கள் மிகவும் செந்தமிழாய் இருந்தால் எழு தப்பட்டிராது. அவைகளுக்கு ப்ரசாரத்தில் வழங்கும் மத்தியஸ்தம் போன்ற ஸம்ஸ்க்ருத பதங்களோ, அல்லது அக்கருத்துக்களை வெளியிடும் பல பதங்களோ சேர்ந்துத் தான் உபயோகிக்கப் பட்டிருக்கும். அம்மாதிரி விடங்களில் ப்ரஸித்தமான பெயர்ச்சொல் முதலிலும் பிறகு அதன் குணங்களைக் கூறும் விசேஷணபதங்கள் சேர்ந்தாப் போலும் சொல்லப்பட்டிருக்கும். (ஸேவகன் பதத்தில்போல்)