பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/212

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

208



மூன்றாம் பாகம்

[பிற நிகண்டுகள்]

பிங்கல நிகண்டு

சேந்தன் திவாகரத்திற்கு அடுத்ததாகக் காலத்தால் முற்பட்டது பிங்கலம்தான். பவணந்தி முனிவர் தமது நன்னூலின் நானூற்று அறுபதாம் நூற்பாவில், ‘பிங்கலம் முதலா’ என இதனையே நிகண்டுகளின் தலை நூலாக எடுத்தாண்டிருப்பதை ஆராயின், ஒரு காலத்தில் திவாகரத்தினும் பிங்கலமே பெருவாரியாகப் பயிலப்பட்டிருந்தது என்பது புலனாகலாம்.

பெயர்க் காரணம்

‘பிங்கலர்’ என்பவரால் இயற்றப்பெற்றதாதலின், ஆசிரியர் பெயராலேயே இந்நூல் ‘பிங்கலம்’ என அழைக்கப்படுகிறது. இதற்குப் ‘பிங்கலந்தை’ என்னும் மாற்றுப் பெயரும் உண்டு.