பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210

210

தால் முந்தியது என்பதும் புலகுைம். இக்கருத்துப் பொருந்தாது எனினும், பிங்கல நிகண்டை அச்சிட்ட பழைய பதிப்பாசிரியரும் அபிதான சிந்தாமணி ஆசிரி யரும் மேற்கண்டவாறு கூறியுள்ளதற்கு அவர்கட்குக் கிடைத்துள்ள சான்றுகளாகக் கருதத்தக்கவை சில உண்டு. அவை வருமாறு -ே

(1) பதின்மூன்ரும் நூற்ருண்டில் கன்னூல் எழு திய பவணந்தி முனிவர், பிங்கல முதலா, கல்லோர் உரிச்சொலின் நயந்தனர் கொளலே' எனப் பிங்கல நிகண்டுக்கே முதன்மை தந்துள்ளார்.

(2) பதினரும் நூற்ருண்டின் இறுதியில் (1594) 'அகராதி நிகண்டு என்னும் நிகண்டு எழுதிய புலியூர்ச் சிதம்பர ரேவண சித்தர் என்னும் புலவர் அந்நூலின் தற்சிறப்புப் பாயிரச் செய்யுளில்,

" தெரிதரு பிங்கலம் திவாகரம் முதலாய்ப்

பரவிய நிகண்டு பலவெடுத்து ஆராய்ந்து ”

எனத் திவாகரத்தினும் பிங்கலத்திற்கே முதன்மை கொடுத்துள்ளார். பவணந்தியாராவது பிங்கல முதலா' எனப் பிங்கலத்தை மட்டும் விதந்து குறிப்பிட்டுள் ளார். ஆளுல் இவரோ, பிங்கலம் திவாகரம் முதலாய்' என இரண்டையும் குறிப்பிட்டு, பிங்கலத்தை முன்னும் திவாகரத்தைப் பின்னுமாக அமைத்துள்ளார். இத ல்ை, திவாகரத்தினும் பிங்கலமே முந்தியது என்னும் கொள்கை உருவாயிற்று.

(3) பிங்கல நிகண்டு நூலின் தொடக்கத்துக்கு முன்னுல் பிற்காலத்தவரால் சேர்க்கப்பட்டுள்ள சிறப் புப் பாயிரச் செய்யுளின் இடையே,