பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222

222

பொருள் பெயர்த் தொகுதி என்னும் இரண்டாவ்து இனத்தைச் சேர்ந்ததாம்; அதாவது, ஒரு சொல்லுக்கு எத்தனை பொருள்கள் (அர்த்தங்கள்) உண்டோ, அத்தனையையும் கூறுவதாம். திவாகரத்தின் இறுதி யில் உள்ளதுபோல் பல் பொருள் கூட்டத்து ஒரு பெயர்த் தொகுதி என்னும் மூன்ருவது இனம் பிங்கலத் தில் பேசப்படவில்லை.

திவாகரத்தோடு பிங்கலத்தை ஒத்திட்டு நோக்கு வாம்:-திவாகரத்தில் உள்ள முதல் இனத்தைச் சேர்ந்த முதல் பத்துத்தொகுதிகளையும் பிங்கலர் முதல் ஒன்பது வகைக்குள் அடக்கிவிட்டார். திவாகரத்தில் உள்ள இரண்டாம் இனத்தைச் சேர்ந்த பதினேராவது தொகுதியைப் பிங்கலர் தமது நூலில் பத்தாவது தொகுதியாக அமைத்துள்ளார். திவாகரத்தில் உள்ள மூன்ரும் இனத்தைச் சேர்ந்த பன்னிரண்டாம் தொகுதி யைப் பிங்கலர் பேசாது விட்டுவிட்டார்.

இனி, ஒவ்வொரு வகையும் எது எதைப் பற்றியது. என்று சிறிது நோக்குவாம் :

(1) வான்வகை -இது ஏழுலகம், வீடு, மழை முதலியன பற்றியது.

(2) வானவர் வகை - இது தெய்வங்களையும் -தேவர்களையும் பற்றியது. .

வான்வகை, வானவர் வகை ஆகிய இரண்டையும் திவாகரர் தெய்வப் பெயர்த் தொகுதி என்னும் ஒரே தொகுதியில் அடக்கி விட்டார்.

(3)." ஐயர்' வகை --முனிவர், கவிஞர் முதலான வரைப் பற்றியது. இப்ப்குதியில் உள்ள பலவற்றைத்