பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250

250

தலைமையும் பெற்றிருக்கவேண்டும்; அதாவது கவிச் சக்கரவர்த்தி-பாவேந்தர் என்ற அளவில் இவர்கள் தலைசிறந்து விளங்கியிருக்கவேண்டும். மேலும், தமிழ் காட்டில் சமண சமயம் தலைவிரித்தாடிய அந்தக் காலத்தில், ஊர்களில் சமயத் தலைவர்களின் செல் வாக்கே மேலோங்கி யிருந்தது என்னும் உண்மையும் ஈண்டு நினைவுகூரத் தக்கது. மற்றும், அண்மைக் காலம் வரையுங்கூட, உலகம் முழுவதுமே சமயத் தலைவர்களே அரசர்க்குமேல் அரசராக உலகை ஆட் டிப் படைத்தனர் என்ற வரலாற்றுக் குறிப்பும் ஈண்டு ஒப்பு நோக்கற்பாலது.

ஆசிரியரின் காலம்

ஆசிரியர் மண்டல புருடர் வாழ்ந்த காலத்தைக் கணக்கிடுவது ஒரு சிக்கலான செயலாகத் தோன்று கிறது. நீந்தத் தெரியாமல் தண்ணிரில் மூழ்கித் தத் தளிப்பவனுக்கு ஒரு சிறு துரும்பும் தெப்பமாகத் தென் படுவது போல், சூடாமணியில் உள்ள ஒரு குறிப்பு ஆசிரியரின் காலத்தை ஒரு தோற்றமாக (உத்தேச மாகக்) கணிக்க உதவுகிறது : .

துடாமணியின் ஒன்பதாவது தொகுதியாகிய செயல் பற்றிய பெயர்த் தொகுதியின் பத்தாவது செய்யுளில் கிருட்டிண ராயன்' என்னும் மன்னன் குறிப்பிடப்பட்டுள்ளான். கொடை மடம்' என்பதற்கு விளக்கம் கூறவந்த மண்டல புருடர், கிருட்டிண ராயன் கைபோல் வரையறை யில்லாமல் வாரி வழங் குவதற்குத்தான் கொடை மடம் என்று பெயர் எனக் கூறியுள்ளார். அச்செய்யுளின் முதல் மூன்று அடிகளி லும் அம்மன்னனைப் புகழின் உயர் எல்லேயில் நிறுத் திச் சிறப்பித்துள்ளார் :