பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276

276

புதுத்திருப்பந்தானே ! இந்நூலுக்குப் பிறகே மேலை காட்டில் அகர வரிசையில் அகராதிகள் தோன்றின என்பது ஈண்டு நினைவு கூரத் தக்கது.

வேறு பெயர்கள்

இரேவண சித்தரால் சூத்திர (நூற்பா) கடையில் எழுதப்பட்ட நூலாதலின் அகராதி நிகண்டிற்கு, 'இரேவண சூத்திரம் என்ற பெயரும் உண்டு. இந்நூல் சூத்திர கடையில் அமைக்கப்பட்ட அகராதியாதலின் இதற்குச் சூத்திர வகராதி என வேறு ஒரு பெயரும் உண்டு.

ஆசிரியர் வரலாறு

ஆசிரியர் இரேவண சித்தர் எனப்படுபவர். இவர் புலியூர்ச் சிதம்பர ரேவன சித்தர் என நீளமாகவும் அழைக்கப்படுகிருர், புலிக்கால் முனிவர் (வியாக்கிர பாதர்) வழிபட்ட ஊராதலின் சிதம்பரத்திற்குப் புலியூர் என்ற பெயரும் உண்டு. எனவே, ஆசிரியரது ஊர் சிதம்பரம் என்பது புலனுகும். இவர் சைவ வேளாள மரபினர் எனவும், வீரசைவச் சமயத்தினர் எனவும் சொல்லப்படுகிருர் ஆசிரியர் பல பாக்களில் பட்டி சுரரைத் தொழு திருப்பதால், திருப்பட்டிசுரத்தில் எழுந்தருளியிருக்கும் சிவனைக் குலதெய்வமாகக் கொண் டவர் என்பது புலப்படும்.

அகராதி நிகண்டேயன்றி, திருப்பட்டீசுரப் புராணம், திருவலஞ்சுழிப் புராணம், திருமேற்றளிப் புராணம் ஆகிய புராண நூற்களும் ஆசிரியர் இயற்றி யுள்ளார். எல்லாவற்றிற்கும் மேலாக, முதல் முதல் அகராதி முறையில் நிகண்டு இயற்றிய திறனென்றே,