பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

319

அரும்பொருள் விளக்க நிகண்டு

சொற்கட்கு அருமையாகப் பொருள் விளக்கும் நிகண்டு அரும் பொருள் விளக்க நிகண்டு. அரும் பொருள் விளக்கத் தீபிகை என்று பாயிரத்தில் ஆசிரி யர் பெயர் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், அரும் பொருள் விளக்க நிகண்டு என்றே பரவலாக இஃது அழைக்கப்படுகிறது.

ஆசிரியர் வரலாறு

இதன் ஆசிரியர் அருமருந்தைய தேசிகர் என்பார். இவர் திருச்செந்துாரினர்; சிவப்பிரகாசர் என்பாரின் குமாரர்; வீரசைவ சமயத்தினர்; சிதம்பரம் பச்சைக் கந்த தேசிகரின் மாணுக்கர்; பச்சைக் கந்த தேசிகரின் ஆணைப்படி இவர் இந்நூல் செய்தாராம். இச்செய்திகள் ஆசிரியரே பாடிய பாயிரச் செய்யுட்களால் அறி யப்படுகின்றன. மேலும் ஆசிரியர், நூலின் பதினெட் டுத் தொகுதிகளின் இறுதிகளிலும் செந்தில் அரு மருந்தையன்', 'செந்தில் மேவும் அருமருந்தையன்' என்று மாறி மாறித் தம்மைச் சுட்டியுள்ளார்; தாம் செந்தில் (திருச்செந்துரர்) முருகனை வழிபடுபவர் என் றும் கூறிக் கொள்கிருர். இதல்ை, செந்தில் வேலன் ஆசிரியருக்கு வழிபடு கடவுள் என்பது புலனுகும்.

காலம்

பாயிரத்தின் இறுதிச் செய்யுளில் ஆசிரியர் இக் கிகண்டு வெளியான காலத்தைத் தெளிவாகத்