பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/337

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

333

333

இனி நூலின் மாதிரிக்காகச் சில நூற்பாக்கள் வருமாறு:

விநாயகர் துதி

அருட்கடல் விநாயகன் அடியிணை யிறைஞ்சிப் பொருள்தொகை நிகண்டினைப் புகலுது மியாமே.”

ஒரு பொருள்

ஒருமை யாவது முத்திப் பேரும்

அஃதிறை யுணர்ந்துற லாமென மொழிப.”

(ஒன்று எனச் சிறப்பிக்கத் தக்கது வீடு பேறு)

இரு பொருள்

' அச்சுவினி தேவர் அவர் இருவோர் தமைத்

தேவ மருத்துவர் என்னச் செப்புவர்.”

(தேவ மருத்துவர் இருவர்=அச்சுவினிதேவர் எனப்படு வர்)

" அயனம் இரண்டு உத்தரம் தக்கிணமே.” (உத்தராயணம், தட்சிணுயணம் என அயனங்கள்

இரண்டாம்)

முப்பொருள்

'அயன் அரி அரன் மும் மூர்த்தியாமே.”

(மும்மூர்த்திகள் = அயன், அரி, அரன் என்பவர்கள்)

இப்படியாக ஒவ்வொரு தொகைப் பொருளும் விளக்கப்பட்டிருப்பதை நூலில் காணலாம். மேலே