பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/352

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348

இலக்கத் திறவுகோல்

இப்படியொரு நூல் சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இஃதும் பல் பொருள் கூட்டத்து ஒரு பெயர்த் தொகுதியைச் சார்ந்ததாகும்.

இலக்கம் என்ருல் எண். தொகை எண்களால் குறிக்கப்படும் பொருள்களை அறிந்து கொள்வதற்கு இந்நூல் ஒரு திறவுகோல் (சாவி) போல இருத்தலின் இலக்கத் திறவுகோல் என அழைக்கப்படுகிறது.

இந்தக்காலத்தில் நூல்(புத்தக)விற்பனையாளர்கள் வாங்குவோரைக் கவர்வதற்காக வாணிக நோக்குடன் கவர்ச்சியாக நூற்கட்குப் பெயர் வைப்பது போல, இந்த இலக்கத் திறவுகோல் என்னும் பெயர் இயற்கை யிலேயே கவர்ச்சியாக அமைந்து விட்டதல்லவா ? திறவுகோல் இருந்தால்தானே திறந்து உள்ளேயிருக் கும் பொருளைக் காணமுடியும் ! அது போலவே, இந் நூலின் துணைகொண்டு, தொகை எண்களில் அடக் கப்பட்டிருக்கும் பொருட் பெயர்களைத் தெரிந்து கொள் ளலாமன்ருே ?

தொகைண்ைகளால்சுட்டப்படும் பொருட்பெயர்கள் அகரவரிசையில் முறைப்படுத்தப்பட்டு ஒர் அட்ட வ2ண (Alphabetical List) கொடுக்கப்பட்டிருக்கிறதாம் இந்நூலில்.