பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/359

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

355

355

பட்டது. சூடாமணியைக் காட்டிலும் மிக விரிவாகப் பல்வகை வழக்குச் சொற்களும் இதில் இடம் பெற்றுள் ளன; திருநெல்வேலி மாவட்டத்து வழக்குச் சொற்கள் மிக்குள்ளன. விரிவான இங்கிகண்டும் எதுகை முறை யில் அமைக்கப்பட்டிருப்பது படிப்போர்க்கு ஒரளவு வசதியே. இச்செய்திகளைப் பாயிரப் பகுதியிலுள்ள,

  • பொன்பொலி வீரைவேணிப் பூமிநா தன்றன் தாசன்

முன்புறு நிகண்டோடேனே முதுமொழிப் பொருளனேகம்

இன்புறும் எதுகை யாக இயற்றுமிந் நிகண்டை மேலோர்

அன்பமை கருத்திற் கொள்ள அருள்செய் ஐங்கர மாதேவே.” எனனும பாடலால அறியலாம்.

ஒரு சொல் பல் பொருள் தொகுதியைச் சேர்ந்த

கிகண்டுகளுக்குள்ளே விரிவு நிகண்டே மிகப் பெரிய தாகும். இதில் ஏறக்குறைய 1150 விருத்தப் பாக்கள் உள்ளன. இனி நூலின் மாதிரிக்காக இரண்டு செய்யுட்கள் வருமாறு:

(ககர எதுகை)

  • அகம் இடம் பாம்பு தானியம் புவி பள்ளம் உள்ளோடு

அகலியப் பொதுவே தண்டம் ஆகாயம் ஆழம் ஆன்மா பகலன் ஏழுருபு துக்கம் பாவம் உள்ளிடம் ஒர்தாரு தகுதியில் குணம் வீடோடு சாருபத்திரவம் நெஞ்சாம்."

இப்பாடலில் அகம்' என்னும் சொல்லுக்குரிய பொருள்கள் தரப்பட்டுள்ளன.

(மகர எதுகை) ' கம்மலே இருமல் ஒர்வகைக் கடுக்கன் காதோலை

பம்மல் மாசோடு மங்கல் குரலடைப்பு என்பர் பாரோர்; பம்மல் மந்திப்பு மூடல் பொருத்திக் கட்டுகை மந்தாரம் செம்முதல் ஐம்பேர் என்பர்; மோட்டி தலைவி செல்வி.”