பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/366

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

362

போகர் நிகண்டு

போகர் ஒரு சித்தர். மற்ற மக்களால் செய்ய முடி யாத வியத்தக்க அருஞ்செயல்கள் புரிபவரைச் சித்தர் எல்ை மரபு. போகரும் அருஞ் செயல்கள் பல புரிந்த தாகப் புராணக் கதைகள் பல உண்டு. இவர் அகத்தி யரின் மாணுக்கர் என்பர் சிலர். காலாங்கிநாதர் என்ப வரின் மாணக்கர் இவர் என இவரே இயற்றிய போகர் ஏழாயிரம்' என்னும் , நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொங்கணர் கருவூர்த் தேவர், சுந்தராநந்தர், மச்ச முனி, கந்தீசர், இடைக்காடர், கமலமுனி, சட்டைமுனி முதலிய சித்தர் பெருமக்கள் போகரின் மாணுக்கர்கள் என்று சிலர் கூறுகின்றனர். ஆனல், இக்கிகண்டின் இறுதியில், மேல் குறிப்பிடப்பட் டிருப்பவர்கட் கெல்லாம் போகர் வணக்கம் சொல்லியுள்ளார். உண்மை எதுவோ......? -

விருத்தப்பா யாப்பினுலான போகர் நிகண்டு, போகர் நிகண்டு ஆயிரத் திருநூறு' என்று பாடல் களின் எண்ணிக்கையையும் சேர்த்துப் பெயர் அழைக் கப்படுவ துண்டு. இதில் 1200 பாடல்கள் உள்ளன. இந்நூலே யன்றி, போகர் ஏழாயிரம், நிகண்டு பதினேழாயிரம் சூத்திரங்கள், எழுநூறு யோகம் என் னும் நூல்களும் போகர் இயற்றியுள்ளார். நிகண்டு பதினேழாயிரம் சூத்திரங்கள்' என்னும் பெயரிலிருந்து, 17000 நூற்பாக்கள் கொண்ட ஒரு பரந்த நிகண்டு போகரால் இயற்றப்பட்டுள்ளது என்று அறியும்போது பெரு வியப்பு தோன்றுகிறது. இனி, இங்கே சொல்ல