பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/379

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

375

375

ஆசிரியர் ஆந்தம் தெ ப்ரோயன்சா (Fr. Antem de Proenca) என்னும் மேலைப் புலத்துறவியார். இது. தோன்றிய காலம் கி. பி. 1679 ஆகும். மலையாளத்தி லுள்ள அம்பலக்காடு என்னும் இடத்தில் இது பதிப் பிக்கப்பட்டது. பதினேழாம் நூற்ருண்டில் ஏறக் குறையத் தமிழ் மொழியும் மலையாள மொழியும் ஒன்றே யாதலின், மேலைப் புலத் துறவியார் இவ்வக ராதியை மலையாளப் பகுதியில் உருவாக்கியதில் வியப் பொன்றுமில்லை.

இஃதொன்று தவிர, ஐரோப்பிய ம்ொழிகளேடு தமிழ் பிணைந்த மற்ற அகராதிகள் பதினெட்டாம் நூற்ருண்டிலும் பத்தொன்பதாம் நூற்ருண்டிலும் தோன்றின.