பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/393

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

389

பத்தொன்பதாம் நூற்றாண்டு அகராதிகள்


அகராதித் தமிழ்


Dictionnaire Francais - Tamoul Tamoul-Francais


மேலுள்ளாங்கு நான்கு வரிகளில் பெயர் சொல்லப் பட்டிருப்பது ஓர் அகராதியாகும். 282 பக்கங்கள் கொண்ட இவ்வகராதியில் இரண்டு பாகங்கள் உள்ளன. முதல் பாகத்தில் பிரெஞ்சுச் சொல்லுக்குத் தமிழ்ச் சொல்லால் பொருளும், இரண்டாம் பாகத்தில் தமிழ்ச் சொல்லுக்குப் பிரெஞ்சுச் சொல்லால் பொருளும் கூறப்பட்டுள்ளன. இரண்டு பாகங்களிலுமே பிரெஞ்சு, தமிழ் ஆகிய இரு மொழிகளும் இடம் பெற்றிருப்பினும், நூலின் பெயராக முதலில் 'அகராதித் தமிழ்' என்னும் அழகிய பெயர் கொடுக்கப்பட்டிருப்பது மிகவும் புதுமையாகவும் கவர்ச்சியாகவும் உள்ளது.

இதன் ஆசிரியர் ப்ளான்' (A. Blin) என்னும் பிரெஞ்சுக்காரர். நூல் தோன்றிய காலம் கி.பி. 1831. இவ்வகராதி முழுதும் அழகாகக் கையால் எழுதப் பட்டு, அப்படியே படி எடுக்கும் 'சைகிளோஸ்டைல்' (Cyclostyle) பொறியின் மூலம் பல படிகள் (பிரதிகள்) எடுக்கப்பட்டுக் கட்டடமும் (Binding) கட்டப் பட்டுள்ளது. நூலைத் திறந்து பார்த்தால் கையெழுத்துப்