பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/397

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

393

393

“ Dictionarium Latino - Gallico - Tamulicum" "'Dictionaire Latin - Francais - Tamoul இலத்தீன் - பிராஞ்சு - தமிழ் அகராதி'

மேலுள்ளவாறு மூன்று மொழிகளில் பெயர் கொடுக்கப்பட்டுள்ள ஓர் அகராதி உள்ளது. இம் மூன்று பெயர்களும் ஒரே பொருள் (அர்த்தம்) உடைய வையே. மூன்றுமே ஒரே அகராதியைத்தான் குறிக் கின்றன. இம் மூன்றனுள் முதல் பெயர் இலத்தீன் மொழியாகும்; இரண்டாவது பெயர் பிரெஞ்சு மொழி; மூன்றாவது பெயர் தமிழ் என்பது படிப்பவர்க்குத் தெரியும். தமிழ்மொழி , Tamulicum என்று இலத்தின் மொழியிலும் , Tamoul என்று பிரெஞ்சு மொழியிலும் எழுதப்படுகிறது.

இவ்வகராதியில், இலத்தீன் சொல்லுக்கு நேராகப் பிரெஞ்சு சொல்லாலும், அதையடுத்துத் தமிழ்ச் சொல் லாலும் பொருள் கூறப்பட்டிருப்பதைக் காணலாம்.

இதனை, கிறித்துவத் துறவியர் இருவர் இணைந்து இயற்றியதாக நூலின் முகப்பு அறிவிக்கிறது. புதுச் சேரி மாதா கோயில் அச்சகத்தாரால் கி.பி. 1846-ஆம் ஆண்டில் இந்நூல் அச்சிடப்பெற்றது. இந்த அச்சகத் தில் மேலும் பல ஆண்டுகள் கழித்து அச்சான தமிழ் - பிரெஞ்சு அகராதியின் மறுபதிப்பில், அவ்வகராதியை, 'முய்சே ' (L. Mousset), 'துய்புய் (L. Dupus) என்னும் அறிஞரிருவர் இணைந்து இயற்றியதாகக் கூறப்பட் டுள்ளது. இந்த இருவரே இலத்தீன் - பிரெஞ்சு - தமிழ் அகராதியையும் இயற்றியவராவர் எனக் கொள்ள லாம்.