பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/402

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

398

398

வரி, கிறேன், ந்தேன், வேன், ய. வரி, க்கிறேன், த்தேன், ப்பேன், க்க.

மேலே, வரி என்னும் வினைப் பகுதியிலிருந்து முக்கால வினைமுற்றுக்களும் வினையெச்சமும் எப்படி உருவாகி அமைகின்றன என்பது நன்கு தெளிவாகும் படி வரி என்பதன் பக்கத்தில் கால் புள்ளியிட்டுக் காட்டப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது. நம்மவர் வெளியிடும் தமிழ் அகராதிகளில், வரி, வரிதல், வரித்தல் எனத் தொழிற் பெயர் உருவங்களே இருக்கும். ஃபாபிரிசியஸ், ராட்லர், வின்சுலோ முதலிய வெள்ளையர்களால் வெளியிடப்பட்ட அகராதிகளிலோ, வரிகிறது, வரிகிறேன், வரிய, வரிக்க முதலிய முற்று உருவங்களும் எச்ச உருவங்களும் உள்ளன. வெள்ளைய ருள்ளும் வின்சுலோவின் அகராதியில் தான் மேலுள்ள வாறு பகுதிக்குப் பக்கத்தில் கால்புள்ளி யிட்டுக் காட்டப்பட்டுள்ளது. தமிழர்கள் வழிவழி வழக்கத் தினால் முற்றுருவங்களையும் எச்ச உருவங்களையும் பேசவும் எழுதவும் இயற்கையாகவே தெரிந்துவைத் துள்ளனர். ஆனால், புதிதாகத் தமிழ் கற்கும் வெள்ளை யர்களுக்கு இந்த வாய்ப்பு எப்படியிருக்க முடியும்? எனவேதான், வின்சுலோ அவர்கள், ஒரு வினைப் பகுதி யிலிருந்து மற்ற வினையுருவங்கள் எப்படி யெப்படி யெல்லாம் உருவாகின்றன என்று கால் புள்ளி யிட்டுக் காட்டியுள்ளார். ஆராய ஆராயத்தான் புதுப்புது வசதிகள் வளரும் என்னும் இயற்கை அடிப் படை யை யொட்டி வின்சுலோவின் அமைப்பில் இந்த வசதி உருவாகியுள்ளது. வெள்ளையர்கள் தங்கள் நன்மைக்காக இவ்வித வேலைகள் புரிந்தாலும், அவர் களால் மறைமுகமாகவாவது உலகில் தமிழ் பரப்பப்