பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/407

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

403

இருபதாம் நூற்றாண்டு அகராதிகள்



இருபதாம் நூற்றாண்டு அகராதிகளைப் பற்றி இந்நூற்றாண்டினர் நன்கறிவர். இந்நூற்றாண்டில், போர்ச்சுகீசியம், இலத்தீன், பிரெஞ்சு ஆகிய மொழி களுடன் தமிழ் பிணைந்த அகராதிகள் புதிதாகத் தோன்றுவது நின்றுவிட, தமிழுக்குத் தமிழ் அகராதி களும் ஆங்கிலத்தொடு தமிழ் பிணைந்த அகராதிகளும் மட்டுமே புதிது புதிதாகத் தோன்றலாயின. ஆனால், பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றின பிரெஞ் சொடு தமிழ் பிணைந்த பழைய அகராதிகள் மட்டும், இருபதாம் நூற்றாண்டில், புதுச்சேரி மாதா கோயில் அச்சகத்தாரால் மறுபதிப்பு செய்யப்பெற்றன.

உரிமை பெற்ற இந்தியாவில் வேற்று நாட்டு மொழிகளின் ஆட்சி மறைய, இந்திய மொழிகள் தலை தூக்கத் தொடங்கியதால், சமசுகிருதம், இந்தி, மராட்டி, தெலுங்கு போன்ற இந்திய மொழிகளுடன் தமிழ் பிணைந்த அகராதிகள் இருபதாம் நூற்றாண்டில் தோன்றத் தொடங்கின. தமிழுக்குத் தமிழிலுங்கூட, பல்துறை யகராதி வகைகள் பல்கலாயின. இனி, இவ்விருபதாம் நூற்றாண்டு அகராதிகளைக் காலவாரி யாக ஆய்வாம் :

பதினெண் சித்தர் அகராதிகள் பதினெண் சித்தர் என்னும் பெயரால் பின்வரும் அகராதிகள் காணப்படுகின்றன :