பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/410

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

406

406

1800 பெரிய பக்கங்களைக் கொண்டுள்ளது. இக் காலத்தில் வளர்ந்துள்ள பல்வகைக் கலைச் சொற்கள் உட்பட ஏறக்குறைய 63,900 சொற்கள் இதில் இடம் பெற்றுள்ளன. இதன் அடுத்த பதிப்பு மதுரைத் தமிழ்ச் - சங்கத்தாரால் அச்சிடப்பெற்றது.

இலங்கை சி. டபிள்யூ. கதிரைவேற் பிள்ளையின் இவ்வகராதி 1904-ஆம் ஆண்டிலேயே அச்சாயினும், அடுத்த பதிப்பாக இதன் முதல் பாகம் 1910-இலும், இரண்டாம் பாகம் 1912-இலும், மூன்றாம் பாகம் 1923-இலும் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் அச்சேறின. இப்போது இதன் முழு உருவத்தையும் ஒருசேரக் காணலாம்.

தமிழ்ப் பேரகராதி தமிழுக்குத் தமிழான இவ்வகராதியும் மிகப்பெரிது; சதுர் அகராதிபோல் நான்கு தொகுதிகள் உடையது; த. குப்புசாமி நாயுடு என்பவரால் தொகுக்கப் பெற்றது; சென்னை கோபால விலாச அச்சியந்திர சாலையில் 1906-இல் பதிப்பிக்கப்பட்டது.

சிறப்புப் பெயர் அகராதி சிறந்த தெய்வங்கள், ஊர்கள், நூற்கள், புலவர்கள் முதலான பல்வகைப் பொருள்களின் சிறப்புப் பெயர்களை அகரவரிசைப்படுத்திப் பொருள் கூறும் தமிழுக்குத் தமிழ் அகராதி யிது. ஆசிரியர் ஈக்காடு - இரத்தினவேலு முதலியார். காலம் 1908.

இராமநாதன் தமிழ் அகராதி The Twentieth Century Tamil Dictionary GTOOTOJO தலைப்புடைய இவ்வகராதி தமிழுக்குத் தமிழாகும்;