பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/412

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

408

408

அபிதானம் என்றால் பெயர் என்று பொருளாம். கேட்ட பொருள்களை யெல்லாம் அளிப்பதாகச் சொல்லப் படும் சிந்தாமணி' என்னும் தெய்வ மணிக்கல்லைப் போல, தேவையான பெயர்களைப் பற்றி யெல்லாம் விவரம் தெரிந்து கொள்ள உதவும் நூலாதலின் இஃது

அபிதான சிந்தாமணி என்னும் பெயர் பெற்றது.

இதன் ஆசிரியர், சென்னை பச்சையப்பன் கல்விச் சாலையில் தமிழ்ப் பேராசிரியரா யிருந்த ஆ. சிங்கார வேலு முதலியாராவர். 1910-ஆம் ஆண்டில் மதுரைத் தமிழ்ச் சங்கத்தாரால் இது முதலில் வெளியிடப் பட்டது. முதல் பதிப்பு மிகவும் நீள - அகல முடைய 1050 பக்கங்கள் கொண்டது. பின்னர் ஆசிரியர் மேலும் பல செய்திகளைச் சேர்த்து விரிவாக்கித் தாமே இரண்டாம் பதிப்பைத் தொடங்கினார். 1936 - இல் வெளியான இரண்டாம் பதிப்போ 1634 பக்கங்களைக் கொண்டது.

இந்நூலில், அகத்திய முனிவர் முதலாக வெளவால் ஈறாகப் பல பெயர்கள் விளக்கப்பட்டுள்ளன. பிற்சேர்க் கையாக, சைவத் திருப்பதிகள், வைணவத் திருப் பதிகள், அரச மரபுகள் முதலியன பற்றிய பலவகைச் செய்திகள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.

தமிழாசிரியர்க்கும், சொற்பொழிவாளர்க்கும், எழுத் தாளர்க்கும் ஆராய்ச்சியாளர்க்கும் எய்ப்பினில் வைப்பே போல் பெருந்துணை புரிந்து வரும் பெரு நூல் இது என்றால் மிகையாகாது.

கார்னேசன் தமிழ் மொழி யகராதி தமிழுக்குத் தமிழான இந்தும் மிகப் பெரிய அகராதி ( தான். நா.கதிரைவேற்பிள்ளையவர்களின் படைப்பில்