பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/425

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

421

421

திருநெல்வேலி - சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கத்தால் 1938-இல் பதிப்பிக்கப்பட்டது. இதில், 1. கணிதம் (Mathematics), 2. பூதநூல் (Physics), 3. வேதி நூல் (Chemistry), 4. பயிர் நூல் (Botany), 5. விலங்கு நூல் (Zoology), 6. உடலியலும் நலவழியும் (Physiology and Hygiene). 7. பூகோளம் (Geography), 8. வரலாறு முதலியன (History, etc.), 9. வேளாண்மை (Agriculture) ஆகிய ஒன்பது பிரிவுகளின் கீழ், இவ்வொன்பது கலை களைப் பற்றிய ஆங்கிலச் சொற்கள் தமிழ்ச் சொல் விளக்கம் பெற்றுள்ளன. தமிழில் கலைச் சொற்கள் இல்லையெனும் குறையைப் போக்கும் முயற்சிகளுள் இஃதும் ஒன்று!

கலைச் சொற்கள் - பொதுவியல் பல்வகை ஆங்கிலக் கலைச் சொற்களுக்கு நேரான தமிழ்ச் சொற்கள் தரப்பட்டுள்ளன. ஆசிரியர் : சாமி வேலாயுதம் பிள்ளை. ஆண்டு : 1940.

கழகத் தமிழ்க் கையகராதி தமிழுக்குத் தமிழான இக்கையடக்க அகராதியை, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் 1940 - இல் வெளி யிட்டது. இதன் ஆசிரியர்கள் : சேலை. சகதேவ முதலி யார், காழி, சிவ. கண்ணுசாமி பிள்ளை ஆகிய இருவர்.

சை

ஆனந்த விகடன் போட்டி ஆசான் ஆனந்தவிகடன் போட்டியில் விடையாக வந்த சொற்கள் அகர வரிசையில் தொகுக்கப் பெற்ற அக ராதியே யிது. ஒவ்வொரு சொல்லுக்கும் நேரே அத னதன் போட்டி வாக்கியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டு ஒன்று வருமாறு: