பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/426

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

422

422

அகம் - இது பிடித்தவர்கள் பிறர் சொல்வதை அவ்வள வாக லஷ்யஞ் செய்ய மாட்டார்கள்.

இம்மாதிரி போட்டி ஆசான்கள் ஆங்கிலத்தில் உண்டு. அதுபோலவே இது ஆக்கப்பட்டுள்ளது. மேலும் போட்டியில் கலந்துகொள்வோர்க்கு ஒரு வழிகாட்டியாக இருக்கும் என்னும் நோக்கத்துடன் இது வெளியிடப்பட்டதாகத் தெரிகிறது. இதனை 1940 - இல், சென்னை பி. என். சிம்மம் அண்டு கோ. வெளியிட்டது.

இந்தி - தமிழ் அகராதி இந்திச் சொல்லுக்குத் தமிழ்ச் சொல்லால் பொருள் கூறும் இவ்வகராதியை, தட்சிண பாரத இந்தி பிரசார சபையினர் வெளியிட்டுள்ளனர்.

நகா நாட்டாண்மைக் கழக

ஆட்சிமுறைச் சொல்லகராதி நகர நாட்டாண்மைக் கழக ஆட்சிமுறை பற்றிய ஆங்கிலக் கலைச் சொற்கட்கு நேரான தமிழ்ச் சொற்கள் தரப்பட்டுள்ள இவ்வகராதி தமிழ்ப் பாதுகாப்புக் கழகத் தால் 1941-இல் வெளியிடப்பட்டது.

ரகர - றகர அகராதி இது, அரம், மரம் - அறம், மறம் என்பன போல ரகர இன எழுத்துக்களும் றகர இன எழுத்துக்களும் வந்துள்ள தமிழ்ச் சொற்கள் அகர வரிசையில் தொகுக்கப்பட்டுப் பொருள் கூறப்பட்டிருக்கும் அக ராதியாகும். எந்த 'ர' போடுவது - இடையின் 'ர' போடு வதா - வல்லின ற' போடுவதா என்ற ஐயம் ஏற்படின்