பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/438

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

434

434

இந்த அகராதியைப் பயில்பவர்கள், திரிபும் யமக முமாக உள்ள கடினமான செய்யுட்களை எளிதில் பிரித் துப் பொருள் காணும் ஆற்றலைப் பெறுவர்.

இப்படியாகப் புதுப்புது முறையில் பயனுள்ள பல் வகை அகராதிகளை வெளியிட்டுவரும் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினர் மிகவும் பாராட்டற்பாலர்.

தமிழ் ஆட்சிச் சொற்கள்

(அகராதியும் - விளக்கமும்) தமிழ் மொழியால் ஆட்சி நடத்துவதற்குத் தமி ழில் புதுக் கலைச் சொற்கள் வேண்டுமல்லவா? அதற்கு உதவும் வகையில், அகர வரிசையில் ஆங்கிலச் சொற் கட்கு நேரான தமிழ்ச் சொற்கள் இதில் கொடுக்கப்பட் டுள்ளன. பிற்பகுதியில் போதிய விளக்கங்களும் தரப்பட்டுள்ளன. இவ்வகராதியின் ஆசிரியர் : கீ. இராம லிங்கனார் ; வெளியீடு : மதுரை விசாலாட்சி பதிப்பகம் : ஆண்டு : 1960.

A Dravidian Etymological Dictionary இந்த அகராதி, தமிழ், தெலுங்கு, கன்னடம், முதலிய பத்தொன்பது திராவிட இன மொழிகளில் உள்ள ஒத்த உருவமுடைய சொற்கள் சிலவற்றை ரோமன் (ஆங்கில) எழுத்தால் எழுதி, அவற்றிற்கு ஆங்கிலத்தில் பொருள் கூறப்பட்டிருப்பதாகும். இந்த அகராதியில் திராவிட மொழிகளுக்குள் தமிழே மு தன்மை பெற்றிருக்கிறது. முதலில் ஒரு தமிழ்ச் சொல் நிறுத்தப்பட்டுப் பொருள் கூறப்பட் டுள்ளது; அதனை யடுத்து அதே பத்தியில் அந்தத் தமிழ்ச் சொல்லோடு ஏறக்குறைய ஒத்த தோற்ற