பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/45

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

41



கருவூலம்), Word-hord, World of Words (சொல்லுலகம்) English Expositor (ஆங்கிலத் தெளி பொருள் விளக்கி) Ductor in Linguas (மொழியின் வழிகாட்டி), glossographia (அருங்கலைச் சொல் விளக்கம்), New world of words (சொற்களின் புத்துலகம்), Etymologicum (சொல் விளக்க இலக்கணம்), gazophylacium, Dictionary.

மேற்குறிப்பிடப்பட்டுள்ள பெயர்களெல்லாம் அகராதியைக் குறிக்கும் பொதுப்பெயர்களாகத் தெரியவில்லை; சொற் பொருள் கூறும் நூல் இயற்றத் தொடங்கிய ஆசிரியர் ஒவ்வொருவரும் தத்தம் விருப்பத்திற்கேற்பத் தத்தம் நூலுக்கு வைத்த பெயர்களாகவே தெரிகின்றன. இது எது போன்றதெனின், பண்டு தமிழகத்தில் சொற் பொருள் கூறும் நிகண்டு நூற்கள் இயற்றத் தொடங்கிய ஆசிரியர்கள் தத்தம் நூலுக்கேற்ப ‘நாம தீபம்’ (பெயர் விளக்கு), ‘அரும் பொருள் விளக்கம்’, ‘நாநார்த்த தீபிகை’, ‘பல் பொருள் சூடாமணி’ என்றெல்லாம் பெயர் வைத்தாற் போன்றதேயாம். ஆங்கிலத்தில் பல பெயர்களைத் தாங்கிக்கொண்டு சொற் பொருள் கூறும் நூற்கள் தோன்றிக் கொண்டிருந்தகாலை, கி.பி. 1538-ஆம் ஆண்டில் ‘சர் தாமஸ் எலியட்’ (Sir Thomas Elyot) என்னும் அறிஞர் ‘Dictionary’ என்னும் பெயரில் சொற் பொருள் கூறும் நூல் ஒன்று வெளியிட்டார். இந்த ‘Dictionary’ என்னும் பெயரே, பின்பு எல்லாவகைச் சொற் பொருள் கூறும் நூற்கட்கும் பொதுப் பெயராய்விட்டது. இது போலவே தமிழிலும் அகராதி என்னும் பெயரே பொதுப் பெயராய் நிலைத்துவிட்டது.

ஐரோப்பிய மொழிகளிலுஞ் சரி-இந்திய மொழிகளிலுஞ் சரி-பதினேழாம் நூற்றாண்டுவரை அருஞ்