பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/454

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

450

450

கருத்து நன்கு தெளிவாகும். இக்கருத்துக்கு இயற்கை நிலையை யொட்டி இன்னுங்கூடச் சான்று பகரலாம் : அதாவது மக்கள் ஐந்து வயது வரையும் சொற்றொட ரையும் சொற்களையும் பேச்சின் வாயிலாகக் கற்றுக் கொண்ட பின்னர்தான் அவற்றின் உறுப்பாகிய எழுத் துக்களைக் கற்றுக் கொள்ளத் தொடங்குகின்றனர். மற்றும், சொந்த எழுத்துடைய தமிழ் போன்ற மொழி களைப் பேசுவோருள்ளும் படிக்காத மக்கள் பலர், பேச்சு சின் வாயிலாகச் சொற்றொடர்களையும் சொற்களையும் அறிந்து வைத்திருக்கிறார்களே தவிர, எழுத்துக்களை இன்னும் அறிந்தா ரிலர். எனவே, எழுத்து மிகவும் பிந்தியது என்பது உலகறிந்த உண்மையாகும்.

இங்கே, எழுத்து மிகவும் பிந்தியது என்னும் கருத்து இவ்வளவு விரிவாக ஏன் கூறப்பட்ட தென் றால், - சொல்லைவிட எழுத்து எப்படிப் பிந்தியதோ - அது போலவே, சொற்றொடரைவிடச் சொல் பிந்தியது என்னும் கருத்தை வலியுறுத்துவதற்கேயாம். இதனை இன்னுஞ் சிறிது ஆய்வோம் :

அ, ணி,ல் என்னும் எழுத்துக்களைத் தனித்தனி யாக ஒலிக்கும் போது தனி எழுத்துக்குப் பொருள் மதிப்பில்லை ; அவை மூன்றையும் சேர்த்து அணில் என ஒலிக்கும்போதே, அந்த ஒலித்திரள் ஓர் உயிர்ப் பொருளைக் குறித்துப் பொருள் மதிப்பு பெறுகிறது. அணில் என்ற சொல் கூட அணில் எனத் தனியாக ஒலிக்கப்படும்போது அணில் என்ன ஆயிற்று என ஒன்றும் புரியாமையால், போதுமான பொருள் மதிப்பு பெறவில்லை; அச் சொல்லே, 'அணில் மரத்தில் கடிது ஓடுகிறது', 'அணில் கடித்த கனி யிது' என வாக்கியத்தில் வைத்துப் பயன்படுத்தப்படும் பொழுது