பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/462

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

458

458

(1) சொல் தனித்தனியாகப் புரியாமல் மொத்த ஒலித் தொகுப்பாகக் காதில் விழும் ஓராண்டுப் பச்சிளங் குழந்தையின் அழுகையிலும் மொழி உண்டு. பேச்சே யறியாத குழந்தை, அழுகையின் வாயிலாகவும் மற்றும் பல்வகை ஒலிக் குறிப்புக்களின் வாயிலாகவும் மொழி பேசித் தன் கருத்துக்களையும் தேவைகளையும் அறிவிக் கின்றது. பின்னரே சொல்வாரியாகப் பேச்சு புரிகிறது.

(2) நாம் அறியாத வேற்று மொழி ஒன்றினை அம்மொழியாளர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது, நமக்கு அப்பேச்சு, மொத்தையான ஒலித் தொகுப்பாகத் தான் தோன்றுகிறது ; தனித்தனியாகச் சொற்பாகு பாடு ஒன்றும் புரிவதில்லை. ஆங்கிலம் அறியாதவர்கள் ஆங்கிலத் திரைப் படமும் இந்தி தெரியாதவர்கள் இந்தித் திரைப்படமும் பார்க்கும்போது இந்தக் கூத்தைக் காணலாம். ஆனால் மொத்தையான அந்த ஒலித் தொகுப்பில் தனித் தனியாகப் பல சொற்கள் - உண்டு என்பது யாவரும் அறிந்த உண்மை.

60

(3) மக்கள் தாங்கள் மட்டுமே மொழி பேசு வதாக நினைக்கக்கூடாது. பறவை விலங்குகளுங்

கூட மொழி பேசுகின்றன. அவற்றின் வாய்களில் லிருந்தும் ஒலித் தொகுப்புகள் வெளிவருகின்றன அல்லவா? அந்த ஒலித் தொகுப்புகளின் பொருள் நமக்குப் புரியவில்லை யென்பதற்காக பறவை விலங்கு கட்கு மொழி பேசத் தெரியாது என்று சொல்லி விடுவதா . வேற்று மொழியாளர்களின் உரையாடலும் பறவை விலங்குகள் ஒலிப்பது போலத்தானே தோன்று கிறது. பறவை விலங்குகட்குப் பொதுவாக மக்களைப் போன்ற வடிவமும் சிறப்பாகக் கைகளும் இன்மையா லேயே, மக்கள் செய்யும் மற்ற செயல்துறைகளைச்