பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/477

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

473

473

திரி சொற்களே நிகண்டு நூற்களை அடைத்துக் கொண்டன. இந்தத் திரிசொற்களின் கூட்டத்தில், வடமொழியிலிருந்து தமிழுக்கு வந்த சொற்களும் நிரம்ப உள்ளன. நிகண்டுகளில் இப்படி! அகராதி நூற்களிலோ, இயற்சொல் முதலாக எல்லாவிதச் சொற்களும் ஒன்று குறையாமல் நின்று நிலவுகின்றன.