பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/500

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

496

496

என்னும் பெயரால் - அல்லது - ஒரே ஏழுமலை என்னும் பெயரால் பலர் அழைக்கப்படுவதிலுள்ள உண்மை யாது?

ஆறுமுகங்கள் அனைவரும் பல குடும்பத்திலிருந்து வந்தவர்கள் தனித்தனி ஊரினராகவும், தனித்தனி இனத்தினராகவும், தனித்தனி தாய்மொழியினராகவும் இருக்கக்கூடும். இருப்பினும், ஆறு ஆறுமுகங்கட்கும் அவரவர்தம் பெற்றோரால் தற்செயலாகவே ஆறுமுகம் என்னும் ஒரே பெயர் வைக்கப்பட்டுவிட்டது. ஒருவர் வைத்தது இன்னொருவர்க்குத் தெரியவே தெரியாது. இந்நிலையில், எல்லா ஆறுமுகங்களும் ஒரு வகுப்பில் கூடியபோது, பல பேருக்கு ஒரே பெயர் இருப்பது தெரிய வந்தது. இது தற்செயல் நிகழ்ச்சியே. இதேபோல் மொழியிலும் பல பொருள்கட்கு ஒரே பெயர் தற்செய் லாய்த் தோன்றியவையே, வேறினம் தழுவிய ஒரு சொல் பல் பொருட்களாம்.

இனி, பல பொருள் தரத்தக்க ஒரு சொல், எந்த இடத்தில் எந்தப் பொருளில் வந்துள்ள தென் எப்படிக் கண்டுபிடிப்பது என்பது குறித்து ஆராய வேண்டும் :

தனி எழுத்துக்கு மதிப்பில்லாதது போலவே தனிச் சொல்லுக்கும் மதிப்பில்லை. எந்தச் சொல்லும் ஒரு வாக் கியத்தில் வைத்து வழங்கப்படும்போதே தன் முழுப் பொருள் மதிப்பையும் பெறுகிறது. ஒரு வாக்கி யத்திலுள்ள ஒரு சொல்லானது, தனக்கு முன்னும் பின்னுமுள்ள சொற் சூழ்நிலைகளின் துணையால் தன் பொருளைத் தானே எளிதில் விளக்கிவிடும். எனவே, ஒரு சொல்லுக்கு இரண்டு அல்லது மூன்று பொருள்கள்