பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/509

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

505

505

கொடுத்தார்கள் என்றால், அதில் ஒரு மறைபொருள் (இரகசியம் ) அடங்கியிருக்கிறது. இக் காலத்தார்க்கு எட்டாத உச்சாணிக் கிளைச் செய்தி அது! ஆனால் அன்று அஃது ஊர் அறிந்த 'இரகசியமே'! அது வருமாறு:

அகராதிக் கலை (Lexicography)யாகிய நிகண்டு நூற்கள் பல தமிழ் மொழியில் உள்ளனவன்றோ! பல்கலைக் களஞ்சியங்களாகிய - பல் கலைப் பொருட் காட்சி நிலையங்களாகிய இந்நிகண்டுகளை நிரம்பக் கற்றிருந்ததனால், அக்காலத்தவர் அன்றிருந்த எந்தக் கலை நூலுக்கும் ஈடு கொடுக்க முடிந்தது. அதனால் அவர்கள் முழு மொழிப் பயிற்சி - முழு மொழிப் புலமை உடையவர்களாக மதிக்கப் பெற்றனர். கல்வித்துறை யில் நிகண்டுப் பயிற்சியின் நன்மையும் இன்றியமை யாமையும் இப்போது விளங்குமே!

ஆம்! அக்காலத்தில் என்றென்ன - இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கூட நிகண்டு இல்லாத கல்வி சிறந்தது கிடையாது. தமிழ் நாட்டில் கல்வி என்றால் அதில் நிகண்டிற்கு முதலிடம் இருந்தது பழைய முறைத் திண்ணைப் பள்ளிக்கூடங்களில் என் றென்ன - றென்ன வெள்ளையர்கள் வந்த பிறகும், அவர்கள் மேற்பார்வையில் நடத்தப்பட்ட பள்ளி களிலும் நிகண்டுக் கல்வி இருந்தது.

கவ்வித்துறையில் மொழிப் பாடத்தைக் 'கருவிப் பாடம்' (Stool Subject) என்று சொல்வது மரபு மொழியின்றி எந்தக்கலையினையும் எழுதவோ கற்கவோ முடியாதல்லவா? அந்த மொழிப் பாடத் துள்ளும் செய்யுள், உரைநடை, இலக்கணம் முதலியவற்றைக்