பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

63

(1) சிலவிடங்களில், ஒரே பொருளைக் குறிக்கும் பல பெயர்கள் (சொற்கள்) கொடுக்கப்பட்டுள்ளன. எடுத்துக் காட்டாக,—மிகுதி என்னும் ஒரு பொருளைக் குறிக்க, உறு, தவ, நனி என மூன்று சொற்கள் காட்டப்பட்டுள்ளன; பெருமை என்னும் ஒரு பொருளைக் குறிக்க, தட, கய, நளி என்னும் மூன்று சொற்களும், அச்சம் என்னும் ஒரு பொருளைச் சுட்ட, பே, நாம், உரும் என்னும் மூன்று சொற்களும், கூறப்பட்டுள்ளன. இவை ஒரு பொருளைக் குறிக்கும் பல பெயர்கள் (சொற்கள்). ஆகையால், இவற்றிற்கு ‘ஒரு பொருள் பல்பெயர்த் தொகுதி’ எனப் பெயர் கொடுக்கலாம்.

(2) சிலவிடங்களில், ஒரு சொல்லுக்குப் பல பொருள்கள் (அர்த்தங்கள்) தரப்பட்டுள்ளன. எடுத்துக் காட்டாக,—ஏற்றம் என்னும் ஒரு சொல்லுக்கு நினைவு, துணிவு என்னும் இரு பொருள்களும், விழுமம் என்னும் ஒரு சொல்லுக்கு சீர்மை, சிறப்பு, இடும்பை என்னும் மூன்று பொருள்களும் சொல்லப்பட்டுள்ளன. கடி என்னும் ஒரே சொல்லுக்கு, வரைவு, கூர்மை முதலிய பன்னிரண்டு பொருள்கள் கூறப்பட்டுள்ளன. ஒரு சொல்லுக்குப் பல பொருள்கள் கொடுக்கப்பட்டிருப்பதால், இன்னவற்றிற்கு ‘ஒரு சொல் பல்பொருட் பெயர்த் தொகுதி’ எனப் பெயர் தரலாம். சொல்லுக்குப் பொருள் கூறும் (Homonyms) பகுதியாகிய இதிலேயே, ஒரு சொல்லுக்கு ஒரு பொருள் கூறியிருப்பதையும், அடக்கிக் கொள்ள வேண்டியதுதான்!

(3) சில விடங்களில், பல பொருள்களின் கூட்டமாகிய தொகைப் பெயர்கள்—அதாவது—எண்ணிக்கையால் குறிக்கப்படும் பெயர்கள் விளக்கப்பட்-