பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/75

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

71

என்னும் பெயருடைய ஆசிரியரால் இயற்றப்பட்ட நூல், அவர் பெயராலேயே கலைக் கோட்டுத் தண்டு என அழைக்கப்பட்டது-என்னும் கருத்து உறுதிப்படும்; படவே, நன்னூல் உரைகாரரும் களவியல் உரைகாரரும், கருத்தனால் (ஆசிரியனால்) பெயர் பெற்ற நூலுக்கு எடுத்துக்காட்டாக இந்நூலைக் குறிப்பிடாமல், இடுகுறியால் பெயர் பெற்ற நூலுக்கு எடுத்துக்காட்டாக இந்நூலைக் குறிப்பிட்டிருப்பது பொருத்தமற்றதாகும். ஆனால், இவ்வுரையாசிரியர்கள், கலைக் கோட்டுத் தண்டு என்னும் நூலை இயற்றியதால் ஆசிரியர் கலைக் கோட்டுத் தண்டனார் என்னும் பெயர் பெற்றார் என்னும் கருத்துடையவர்களாக இருந்திருக்கலாம். அப்படியெனில், கலைக் கோட்டுத் தண்டை ஊன்றியதனால்தான் ஆசிரியர் கலைக் கோட்டுத்தண்டனார் என்னும் பெயர் பெற்றார் என்னும் கருத்து பொருத்தமற்றதாகப் போய்விடும். இவ்வாறு இருவேறுபட்ட இச்சிக்கலுக்குத் தீர்வு யாது?

சங்க காலப் புலவர்களுள் ‘தொடித்தலை விழுத் தண்டினார்’ என்பவர் ஒருவர். இவரது பாடலொன்று புறநானூற்றில் உள்ளது. அது. ‘இனிநினைக் திரக்கமாகின்று’ என்று தொடங்கும் (243-ஆம்) பாடலாகும் அப்பாடலில் புலவர், ‘ஆழமான மடுவில் குதித்து மணலெடுத்து வந்த இளமை போய்விட்டதே; தண்டு (தடி) ஊன்றி நடுங்கி நடக்கும் முதுமை வந்துவிட்டதே’ என்று இரங்குகிறார், அப்பாடற் பகுதியாவது:–

“இனிநினைந்து இரக்க மாகின்று...............
நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து
குளித்து மணற்கொண்ட கல்லா இளமை