பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

93

வணக்கம் கிடையாது. ஏழாம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்து நரசிம்மவர்ம பல்லவனுடைய படை, சாளுக்கிய மன்னனாகிய புலிகேசியை வென்று வாதாபி நகரைக் கைப்பற்றியபோதுதான், அங்கிருந்த விநாயகர் உருவம் ஒன்றைப் பல்லவனுடைய படைத் தலைவர் பரஞ்சோதியார் (சிறுத்தொண்டர்) தமிழகத்துக்கு முதல் முதலாகக் கொண்டு வந்தார். அதன் பின்னரே -அதாவது ஏழாம் நூற்றாண்டில்தான் தமிழ் நாட்டிற்கு விநாயகர் அறிமுகம் ஏற்பட்டது. இந்நிலையில், சங்க நூற்களில் காணப்படாத விநாயகர் திவாகரத்தில் இடம் பெற்றிருக்கிறார் என்றால், ஏழாம் நூற்றாண்டிற்குப் பிறகே திவாகரரால் திவாகரம் இயற்றப்பட்டிருக்க வேண்டும்.

(2) சேந்தன் அம்மையின்மேல் அந்தாதி பாடியிருப்பதாகத் திவாகரர் கூறியுள்ளார். தொண்ணுாற்றாறு சிறு பிரபந்த (சிற்றிலக்கிய) வகைகளுள் அந்தாதியும் ஒன்று. அந்தாதி போன்ற நூல் வகைகள் சங்க காலத்தில் இயற்றப்படவில்லை. இன்னவை சங்க காலத்திற்கு இப்பால் இடைக் காலத்திலேயே எழத் தொடங்கின.

(3) மேலும், திவாகர நிகண்டின் இரண்டாம் தொகுதியாகிய மக்கட் பெயர்த் தொகுதியில், 'வேள் புலவரசர் சளுக்கு வேந்தர்’ எனச் சாளுக்கிய மன்னர் குடியினர் பேசப்பட்டுள்ளனர். எனவே, சாளுக்கிய மன்னர்கள் தமிழ் நாட்டோடு தொடர்பு கொண்ட பின்னரே திவாகர நூல் தோன்றியிருக்க வேண்டும். தமிழ் நாட்டோடு எந்த விதமான தொடர்பும் இல்லாத மன்னரைத் தமிழ் நிகண்டு பேச வேண்டிய காரணமே