பக்கம்:தமிழ் அங்காடி.pdf/106

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104 தமிழ் அங்காடி


வீடணன் வெளியேற்றம்

இனியும் இங்கே இருந்து கொண்டு எனக்கு அறிவுரை கூறுவா யாயின், என் கையாலேயே ஒழிவாய் என்று இறுதியாக இராவணன் கூறினான். வீடணன் மேலும் சில கூறிவிட்டு, தனக்கு அமைச்சர்கள் போல் துணையாக உள்ள அனலன், அனிலன், அரன், சம்பாதி ஆகிய நால்வருடன் இலங்கையை விட்டு வெளியேறினான்.

வீடணன் சூழ்வு

வெளியேறிய வீடணன் தன் அமைச்சர் நால்வருடன் கடலின் அக்கரையாகிய வட கரையை வான்வழி அடைந்தான்; வானரப் படைவெள்ளத்தைத் தொலைவில் இருந்தபடி கண்டான்; பின் தன் அமைச்சர்களை நோக்கிக் கூறலானான்:

யான் அறவழி ஒழுகும் இராமர்பால் அன்பு பூண்டுளேன். உயிர் வாழ்தலை யான் விரும்பவில்லை - புகழையே விரும்புகிறேன். உடன் பிறந்த என் சொல்லைக் கேள் என யான் கூறியதை இராவணன் ஏலாமல் என்னையும் துறந்து விட்டான். இனி நாம் என்ன செய்யலாம் என உசாவினான்:

"அறந்தலை நின்றவர்க்கு அன்பு பூண்டனன்
மறந்தும் நன்புகழ் அலால் வாழ்வு வேண்டலன்
பிறந்த என் உறுதி நீ பிடித்தியால் எனத்
துறந்தனன் இனிச் செயல் சொல்லுவீர் என்றான்"
(18)

அறந்தலை நின்றவர் =இராமர். யான் உடன் பிறந்ததற்கு உரிய கடமையைச் செய்தேன் என்பதை ‘பிறந்தஎன் உறுதி என்பதால் அறிவித்தான். யான், தமையன் செய்யும் கொடுமைகளைப் பொறுத்துக்கொண்டு இலங்கையிலேயே இருந்து உயிர்வாழ்தலை விரும்பவில்லை;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/106&oldid=1203472" இலிருந்து மீள்விக்கப்பட்டது