பக்கம்:தமிழ் அங்காடி.pdf/110

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108  தமிழ் அங்காடி


வீடணன் இராவணனுக்கு அறிவுரை கூறியது, அவன் ஏற்காமல் வீடணனை விரட்டி விட்டது முதலியவற்றை யெல்லாம் அனலன் கூறினான். எல்லாம் கேட்ட மயிந்தன் இராமனிடம் விவரம் சொல்வதற்காகச் சென்றான்.

நடந்தவை யனைத்தும் மயிந்தன் சொல்லக் கேட்ட இராமன், சுக்கிரீவன் முதலியோரின் கருத்தை வினவினான்.

தமையனைத் துறந்தமை

சுக்கிரீவன் அடக்கத்தோடு தன் கருத்தைக் கூறலானான். ஐயனே! வீடணன் தன் அண்ணனைத் துறந்தமைக்குக் காரணம் என்ன? இராவணன் வீடணனோடு போர் புரியவில்லை; அவனைக் கொல்லவும் துணியவில்லை. அங்ஙனம் இருக்க, அண்ணனைப் பிரிந்த அவனை எவ்வாறு நம்புவது? அரக்கர்களுள் யார்தான் சிறந்தவர்?

“தம்முனைத் துறந்தது தரும நீதியோ
செம்மைஇல் அரக்கரில் யாவர் சீரியோர்"(59)

தம் முன் = தங்கட்கு முன் பிறந்த அண்ணன் - இராவணன். எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி என்று கேட்பதுபோல், அரக்கருள் யார் நல்லவர்? எல்லாரும் சமமே =எனவே வீடணன் மட்டும் நல்லவனாயிருப்பது எவ்வாறு? - என வினவினான்.

ஐம்பெருங் குரவர்

தமையன், தாய், தந்தை, ஆசான், அரசன் ஆகிய ஐம் பெருங் குரவர்களும் வணங்கிப் போற்றத்தக்கவர்கள்; இவர் கட்கு ஏதேனும் தொல்லை நேர்ந்தபோது இவர்களை விட்டு ஓடிப்போய் தன் தன்னை மட்டும் காத்துக் கொல்ல முயல்வது என்ன பண்பாகும்? இது எள்ளி நகையாடற்கு உரியது - விரும்பத் தகாதது:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/110&oldid=1203476" இலிருந்து மீள்விக்கப்பட்டது