பக்கம்:தமிழ் அங்காடி.pdf/114

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112  தமிழ் அங்காடி


எனவே, அடைக்கலம் கொடுத்துவிடின் பின்னர்க் கைவிடலாகாது; ஆதலின் வீடணனுக்கு அடைக்கலம் தருதல் வேண்டா எனச் சாம்பவன் கூறினான்.

பின்னர் இராமன் நீலன் முதலிய தகுதி வாய்ந்த வானரர்கள் சிலரையும் வினவினான். அனைவரும் வீடணனை ஏற்கலாகாது என்றே ஒருமுகமாய்க் கூறினர். இறுதியாக இராமன் அனுமனை வினவினான். அனுமன் கூறலானான்:

மறைத்த வாயினன்

நுட்பமான கேள்வி யறிவுடைய அனுமன், தலை தாழ்த்தி - கையால் வாய்பொத்திக் கொண்டு, உடன் இருப்பவர் போதிய அறிவில்லாதவர் எனினும், அவர் களோடும் சூழ்வது (ஆலோசிப்பது) உம் போன்றார் கடன்மை என்று அனுமன் முதலில் அடக்க உரை கூறினான்:

“இணங்கினர் அறிவிலர் எனினும், எண்ணுங்கால்
கணங்கொளல் நும்மனோர் கடன்மைகாண் எனா வணங்கிய சென்னியன் மறைத்த வாயினன் நுணங்கிய கேள்வியன் நுவல்வ தாயினான் (85)

இணங்கினர் =தம்முடன் ஒத்திருப்பவர். கணம் கொளல் = குழுவொடு சேர்த்துக் கொள்ளுதல். கடன்மை = முறைமை (கடமை). கடமை என்பதைக் கடன்மை என எழுதவேண்டும் எனக் கம்பர் நமக்குக் கற்றுக் கொடுத்துள்ளார்.

பெரியோர்களிடம் பேசும்போது, தலை தாழ்த்தி வாய் பொத்திப் பேசுவது உலகியல், இதை நுட்பமான கேள்வியறிவுடைய அனுமன் அறிந்து அவ்வாறு செய்து பேசினான்.

நுணங்கிய கேள்வியர் அல்லாதவர் வணங்கிய வாயுடன் பேசாமல் துடுக்கான முறையில் பேசுவர் என்பதை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/114&oldid=1203485" இலிருந்து மீள்விக்கப்பட்டது