பக்கம்:தமிழ் அங்காடி.pdf/129

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  127


இந்தக் காட்சியைக் கண்ட அனைவரும் மகிழ்வெய் தினர். வீடணன் இராமனது அடைக்கலமானவன் என்பதும் உறுதி ஆயிற்று.

10. கம்பர் கண்ட இரணியன்

இரணியம் என்றால் பொன். பொன்னிறமா யிருப்பதால் இவன் இரணியன் எனப்பட்டான்.

இரணியன் மறைப் பொருளை நான்முகனால் உணர்த்தப் பெற்றான்; முப்பெருங் கடவுளரின் வலிமையையும் ஐம்பூதங்களின் வலிமையையும் தான் ஒருவனே பெற்றவனாம். தன்னை மக்களினமோ வேறின உயிரோ கொல்ல முடியாததும், இரவிலோ பகலிலோ, கட்டிடத்தின் உள்ளோ வெளியிலோ கொல்ல முடியாததும், எந்தப் படைக் கருவியாலும் கொல்ல முடியாததும், நீரால் நெருப்பால் காற்றால் அழிக்க முடியாததும் உலகிற்குத் தானே தனிப் பெருந்தலைவனாய் விளங்க வேண்டுவதுமான பெரிய வரத்தைத் தவஞ் செய்து நான்முகனிடமிருந்து பெற்றவனாம.

"வேதம் கண்ணிய பொருளெலாம்
விரிஞ்சனே ஈந்தான்
போதம் கண்ணிய வரமவன்
தரக்கொண்டு போக்தான்
காதும் கண்ணுதல் மால்அயன்
கடைமுறை காணாப்
பூதம் கண்ணிய வலியெலாம்
ஒருதனி பொறுத்தான் (1)

விரிஞ்சன் - நான்முகன். க ண் ணு த ல் = சிவன். பொறுத்தான் - தாங்கினான். தலைமைக் கடவுளர்கள் அரக்கரின் தவத்தை மெச்சி அவர்கள் கேட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/129&oldid=1204178" இலிருந்து மீள்விக்கப்பட்டது