பக்கம்:தமிழ் அங்காடி.pdf/132

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130  தமிழ் அங்காடி


முன்னை வேதத்தின் முதல்பெயர்
மொழிவது மொழிந்தேன்
என்னை குற்றம் நான் இயம்பியது
இயம்புதி என்றான்” (25)

தந்தை மகனுக்கு ஆற்றும் உதவி நல்லதன் றாயினும், மகன் தந்தைக்கு நல்ல உதவியே ஆற்றியுள்ளான்.

ஆசான் என்ன செய்வார்! தமக்குக் கேடு வந்ததாக எண்ணி அஞ்சியபடி இரணியனிடம் ஓடிப் பிரகலாதன் பணியாமையை அறிவித்தார். பின் இரணியன் ஆசானை நோக்கி, என்மகன் நீர் சொன்னதைச் சொல்லாமல் வேறு என்னதான் சொன்னான்?- என வினவினான்.

அச்சச் சூழ்நிலை

ஆசான் அஞ்சி, தலைமேல் கை குவித்து வணங்கிக் கூறலானார். என் காதில் பாம்பு புகுந்தாற்போன்றதான - உன் மகன் கூறிய சொல்லை யான் கூறின், யான் நரகம் அடைவேன் - என் நாக்கும் வெந்து விழுந்துவிடும் என்றார்:

"அரசன் அன்னவை உணரசெய
மறையவன் அஞ்சிச்
சிரதலம்கை சேர்த்திடாச் செவித்
தொளை சேர்ந்த
உரகம் அன்ன சொல் யான்உனக்கு
உரைசெயின் உரவோய்
நரகம் எய்துவென் நாவும் வெந்துகும்
என நவின்றான்" (37)

அரசன் =இரணியன். சிரதலம் = தலை. சேர்த்திடா= சேர்த்து - 'செய்யா' என்னும் வாய்பாட்டு வினையெச்சம். உரகம் =பாம்பு.

கேட்கக் கூடாததைக் கேட்பின், ‘காதில் நாராசம் காய்ச்சி ஊற்றியது போல் இருந்தது’ என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/132&oldid=1204184" இலிருந்து மீள்விக்கப்பட்டது