பக்கம்:தமிழ் அங்காடி.pdf/134

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132  தமிழ் அங்காடி


"மறங்கொள் வெஞ்செரு மலைகுவான்
பலமுறை வந்தான்
கறங்குவெண் சிறைக் கலுழன்தன்
கடுமையில் கரந்தான்
பிறங்குதெண்திரைப் பெருங்கடல் புக்கு
இனம் பெயராது
உறங்குவான்பெயர் உறுதி என்றுஆர்
உனக்கு உரைத்தார்?’ (49)

கலுழன் - கருடன். எனக்கு அஞ்சி ஓடிக் கடலுள் மறைந்து இன்னும் தூங்கிக்கொண் டிருக்கிற அந்தத் ‘துங்கு மூஞ்சிப் பையனுடைய' பெயரை உனக்கு யார் அறிவித்தது என்று இழித்துக் கிண்டல் செய்யும் முறையிலுள்ள இந்தச் சுவையான கற்பனை கம்பரின் கைச்சரக்கு. இந்த இரணியன் வதைப் படலம் வால்மீகி இராமாயணத்தில் இல்லை.

அரவும் எலியும்

மேலும் வினவுவான்: பிரகலாதா! கடல் மணலினும் மிக்க எண்ணிக்கையில் அவன் கொல்ல நம் அரக்கர் குலத்தினர் அழிந்தனர். எனவே, பாம்பின் பெயரை எலி அன்போடு ஓதுவதால் எலிக்கு வரக் கூடிய நன்மை யாது?

"பரவை நுண்மணல் எண்ணினும்
எண்ணரும் பரப்பின்
குரவர் நம்குலத்து உள்ளவர்
அவன் கொலக் குறைந்தார்
அரவின் நாமத்தை எலிஇருந்து
ஓதினால் அதற்கு
விரவும் நன்மை என் துன்மதி
விளம்பென வெகுண்டான்.” (50)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/134&oldid=1204188" இலிருந்து மீள்விக்கப்பட்டது