பக்கம்:தமிழ் அங்காடி.pdf/141

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  139


என்பது பாடல் பகுதி. இறுதியாக இரணியனும் நரசிங்கரும் கடுமையாகப் போர் புரிந்தனர். தோல்வியுற்றுக் கலங்கிய இரணியனை, நரசிங்கர், அந்தி நேரத்தில், அரண்மனை வாயிலில், தன் தொடைமேல் வைத்துக்கொண்டு, தன் கூரிய நகத்தால் கிழித்துப் பிளந்து மடியச் செய்தார்:

“ஆயவன் தன்னை மாயன்
அந்தியின், அவன் பொற்கோயில்
வாயிலில், மணிக் கவான்மேல்
வயிரவாள் உகிரின், வானின்
மீயெழு குருதிபொங்க வெயில்
விரி வயிர மார்பு
தீ எழப் பிளந்து நீக்கித்
தேவர்கள் இடுக்கண் தீர்த்தான்" (153)

மாயன் = நரசிங்கன். கவான் = தொடை. உகிர் = நகம். இரணியன் பெற்றுள்ள வரத்திற்கு மாறுபடாத வகையில், இரவும் பகலும் இல்லாத அந்தி (மாலை) நேரத்தில், உள்ளும் வெளியிலும் இல்லாதபடி அரண்மனை வாயிலில், மண்ணிலும் விண்ணிலும் இல்லாதபடி தன் தொடைமேல் வைத்து, எந்தப் படைக்கருவியாலும் இன்றி நகத்தினால் கொன்றான். மக்களோ விலங்கோ இல்லாத - இரண்டும் கலந்த நரசிங்க உருவத்துடன் பொருது கொன்றதும் ஈண்டு கவனிக்கத்தக்கது.

திருமாலாகிய நரசிங்கன் இரணியனை நகத்தால் பிளந்து கொன்றதை, நாவுக்கரசர் தமது திருத்தாண்டகத் தேவாரப் பாடல் ஒன்றில்,

"துங்க நகத்தால் அன்றித் தொலையா வென்றித்
தொகுதிறல் அவ்விரணியனை ஆகம் கீண்ட
அங்கனகத் திருமால்"

(6-84–2)

எனக் குறிப்பிட்டுள்ளார். எவரும் எந்தப் படைக் கருவியாலும் தன்னைக் கொல்ல லாகாது என்ற உறுதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/141&oldid=1203294" இலிருந்து மீள்விக்கப்பட்டது