பக்கம்:தமிழ் அங்காடி.pdf/142

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140  தமிழ் அங்காடி


மொழியை இரணியன் பெற்றிருப்பதால், 'நகத்தால் அன்றித் தொலையா வென்றி இரணியன்' என்று நாவுக்கரசர் நயம்பட நவின்றுள்ளார். இது ஒப்பு நோக்கத் தக்கது இங்கே.

நரசிங்கர் தேவர்கட்கு அருள் புரிந்தார். இறுதியில், பிரகலாதன் தன் தந்தைக்குப பதிலாக முடிசூட்டப் பெற்றான்.

வீடவன் இந்த இரணியன் வரலாற்றை இராவணனுக்குக் கூறிச் சீதையை விடுத்து அறநெறி ஒழுகும்படி வற்புறுத்தினான்.

11. வருணன் அடைக்கலம்

ஏழு நாள்

கடலைக் கடக்க வந்த இராமன், கடல் கரையில் தருப்பைப் புல்லைப் பரப்பி அதில் அமர்ந்து வருணன் வரும்படி வேண்டி வருண மந்திரத்தை உருவேற்றிக் கொண்டு ஏழு நாள் தவமியற்றினான். ஒவ்வொரு நாளும் ஓர் ஊழிக்காலம் போல் இருந்தது. அப்படியும் வருணன் வரவில்லை.

“ஊழி சென்றன ஒப்பன ஒரு பகல் அவைஓர்
ஏழு சென்றன வந்திலன் எறிகடற்கு இறைவன்” (6)

கடற்கு இறைவன் = வருணன். ஒரு நாள் போவது ஒரு யுகம் போவது போல் உள்ளது என உலகியலில் கூறுமாறு போல, ஒரு நாள் ஓர் ஊழிக்காலம் போல் தோன்ற ஏழு நாள் தொல்லையுடன் கடந்தும் வருணன்

வரவில்லையாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/142&oldid=1204203" இலிருந்து மீள்விக்கப்பட்டது