பக்கம்:தமிழ் அங்காடி.pdf/152

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150  தமிழ் அங்காடி


"செப்பின் மேலவர் சீறினும் அது சிறப்பு ஆதல்
தப்புமோ அது கண்டனம் உவரியில் தணியா
‘உப்பு வேலை' என்று உலகுறு பெரும்பழி நீங்கி
அப்பு வேலையாய் நிறைந்தது குறைந்ததோ அளக்கர்”
(33)

உவரி, அளக்கர் = கடல். மேலோர் சினந்தாலும் நன்மை கிடைப்பது போல், இராமனின் அம்புகளால் உப்பு வேலை அப்பு வேலை யாயிற்றாம். உப்பு வேலை என்று உலகோர் பழிப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அதற்குச் சில எடுத்துக்காட்டுகள் காண்பாம்:

“கடல்பெரிது மண்ணிரும் ஆகாது
அதனருகே சிற்றூறல்
உண்ணிரும் ஆகி விடும்” (மூதுரை.12)

என ஒளவையார் கூறியுள்ளார். சிவப்பிரகாசர் பிரபுலிங்க லீலையில்

"கடலினும் மூழ்குவர் காலம் ஒன்றினே"

என்று எழுதியுள்ளார். இங்கே, 'கடலினும்' என்பதில் உள்ள ‘உம்’ குளிக்க உதவாத இழிவைக் குறிப்பதால் 'இழிவு சிறப்பு உம்மையாகும். நன்னூல் மயிலை நாதர் உரையில் (268 ஆம் நூற்பா உரையில்) எடுத்துக்காட்டப் பட்டுள்ள

“உவர்க்கடல் அன்ன செல்வரும் உளரே
கிணற்று ஊற்றன்ன நீயுமா ருளையே”

என்னும் பாடல் பகுதியும் இக்கருத்தை உட்கொண்டுள்ளது. இதனால்தான் 'உப்பு வேலை என்று உலகுறும் பெரும் பழி’ என்றார் கம்பர். வேலை = கடல்.

அம்பு என்னும் தமிழ்ச் சொல்லுக்கு வில்லிலிருந்து தொடுக்கும் கணை என்பது பொருள். கடலில் அம்புகள் நிறைந்து விட்டதால் அம்பு வேலை என்றாயிற்று. அம்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/152&oldid=1204219" இலிருந்து மீள்விக்கப்பட்டது