பக்கம்:தமிழ் அங்காடி.pdf/162

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

160  தமிழ் அங்காடி


பாமர நிலையில் பல்பொருட் கிட்டனர்
அதாஅன்று,
பிறிது நாடுபல பிறக்கு முன்பே
அறிவுக் கெட்டா ஐயா யிரமேற்
செறியும் ஆண்டாய்ச் செந்தமிழ்த் தேமொழி
இயலிசை கூத்துகள் இன்னபிற பெற்று
வயங்குவ துலக வரலா றன்றோ?
எனவே,
தொன்மை தமிழ்க்குத் தொலைவில் மகுடமாம்

மென்மை

இம்மா வுலகில் எதற்கு மிலாத
மென்மையும் இனிமையும் மேவிய ஒலிநயம
தொன்மையைத் தமிழ்க்குத் துளக்கும் காட்டாம்.
மென்மை யன்றி மென்சிறார் பேச்சில்
வன்மை தோன்ற வழிதா னுண்டோ?
தமிழ்மொழி முதன்முதல் தரணியில் பேசிய
அமிழ்தத் தமிழரும் அவர்க்கொப் பன்றோ?

இனிமை

அமிழ்தெனும் ஒலியுடன் அமைந்த இனிமையே
தமிழ்ச்சிறப் பிற்குத் தன்னிகர் கரியால்!
தானறி மொழிகளுள் தமிழ்க்கிணை யிலையெனும்
ஊனமில் உண்மையை உரைத்தான் ஒருகவி.
பன்மொழி யினுமிலாப் பாங்குறு ‘ழ'வ்வொலி
நம்மொழி யுற்றது தனிசிறப் பாமே!
வண்டமிழ்ச் சுவைநுகர் வாய்ப்பிலா தோரே
அண்டமும் வீடும் அவாவித் திரிவர்.
உனது மொழிப்பெயர் ஒருவர் வினவின்
'இனிமை' என்றுநீ இயம்பலாம் தடையிலை.
கன்னல் சுவையினைக் கழறுவா யென்றிடின்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/162&oldid=1204247" இலிருந்து மீள்விக்கப்பட்டது