பக்கம்:தமிழ் அங்காடி.pdf/168

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

166  தமிழ் அங்காடி


புதுப்புது மகுடம் புனைய வேண்டுமால்!
மின்னும் மகுடமாம் மிளிர்முடி சூட்டி
அன்னை தமிழை அரியணை ஏற்றி
என்றும் எங்கும் எதிலும்
நின்று நிலைக்க நீடுவாழ்த் துவமே!

[ஆசிரிய விருத்தம்]

“நிலையான தமிழ்நூல்கள் பெருகிடுக
தமிழ்மொழியில் நெடிது நல்ல
கலைவாழ்க தமிழறிஞர் வாழ்ந்திடுக
தமிழாயும் கழகம் வாழ்க
உலகார்ந்த நாடுகளில் உயர்தமிழ்மா
நாடுபல ஓங்கி வாழ்க
தலையாய தமிழுக்கு நிலையாய
மகுடங்கள் தழைத்து வாழ்கவே!”


[தலைவனும் தலைவியும் இணைந்து பாடுதல்]
வாழ்க வாழ்க!
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/168&oldid=1204265" இலிருந்து மீள்விக்கப்பட்டது